போங்கடா துரோகிகளா…. யாருக்கும் ஓட்டு போடுறதா இல்ல: பிக்பாஸை கிழித்த நெட்டிசன்கள்

319

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது, ஓவியா இல்லாமல் சுவாரஸ்யமாக இல்லை என்றே கூறலாம். காரணம், ஓவியா ஆரம்பத்திலிருந்து எது செய்தாலும் அழகாகவே இருந்தது.

இதனால், அவருக்கென்று சமூக வலைதளங்களில் மிகப்பெரிய படையே உருவாகியது. அவர் எத்தனை முறை நாமினேட் செய்யப்பட்டாலும், அவரது ரசிகர்கள் அவரை காப்பாற்றியே வந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் ஏற்பட்ட மன உளைச்சலால் ஓவியா நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு அவர் தன்னிலையை மறந்தார். என்ன செய்கிறோம் என்பதைக் கூட அவரால் யோசிக்க முடியவில்லை. இதனால், பிக்பாஸ் வீட்டிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக அவர் வெளியேறினார்.

இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியை பெரும்பாலானோர் வெறுத்துவிட்டனர் என்றே கூறலாம். இதற்கு ஓவியா ஒரு காரணம் என்றால், மற்றொரு, காரணம், முழுநேர கட்டிப்புடி தொழில் செய்யும் ஒருவர், கெட்ட வார்த்தைகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து கொண்ட ஒருவர், சாப்பாடு, உடற்பயிற்சி இதை தவிர வேறு எதையும் கண்டு கொள்ளாத ஒருவர், நம்பிய நல்ல உள்ளத்திற்கு மருத்துவ முத்தம் கொடுத்து துரோகம் செய்த ஒருவர், குறை கூறி கொண்டே பிழைப்பு நடத்தும் ஒருவர் என மொத்த பிக்பாஸ் கூட்டமும் நயவஞ்சகத்தின் மொத்த உருவமாக இருப்பது தான்.

இவர்களில் ரைசா ஒருவர் மட்டுமே சிறிது ஆறுதல் அளிக்கின்றார். ஆனாலும் இவர் ஓவியாவிடம் செய்த லீலைகளை மறக்க முடியாது.

இந்த நிலையில் இந்த வாரம் ரைசாவை தவிர அனைவருமே வெளியேறும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் யாரை வேண்டுமானாலும் நீங்க நாமினேட் செய்து கொள்ளுங்கள் நாங்கள் யாருக்கும் ஓட்டு போடப்போதில்லை என்று கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். பிக்பாஸ், புஸ் பாஸ் ஆகிவிட்டதற்கு இதுவொன்றே சாட்சி