வாடிக்கையாளர் வேடத்தில் சென்று விபச்சார விடுதியை சுற்றி வளைத்த பொலிஸ்!! ஏழு பெண்கள் அதிரடிக் கைது!

1809

இலங்கையின் கொழும்பு மாவட்டம் கொஹூவல பெப்பிலியான பிரதேசத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த ஏழுபேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இளம் பெண்களை பயன்படுத்தி, இரண்டு மாடி ஆடம்பர வீடொன்றில் ஆயுர்வேத உடல்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் நடாத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதி ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.

பின்னர் அங்கிருந்த பெண் ஆயுர்வேத மருத்துவர் உட்பட 7 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் வாடிக்கையாளரைப் போல் குறித்த பாலியல் தொழில் விடுதிக்குள் திட்டமிட்டுச் சென்றுள்ளார். அவர் அங்கு பிரவேசிக்க 1500 ரூபாவை செலுத்தியுள்ளார்.

 

பின்னர் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விடுதியை முற்றுகையிட்டு அங்கிருந்தோரைக் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் கொழும்பை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.