ப்ரியமானவள் தொடர்: நிஜத்தில் இணைந்த காதல் ஜோடிகள்

790

ப்ரியமானவள் தொலைக்காட்சி தொடரில் ஜோடியாக இணைந்து நடித்த நட்ராஜ்- அவந்திகா ஜோடியினர் நிஜ வாழ்க்கையிலும் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.

இந்த தொடரில் இணைந்து நடித்ததன் மூலமே இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.

இவர்கள் இருவரின் நிஜப்பெயர் விஜய்- சிவரஞ்சனி. தொடரில் கணவன் மனைவியாக இவர்கள் இருவரும் அன்யோன்மாக நடித்ததன் மூலம், ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது.

இதில், சிவரஞ்சனிக்கு முதலில் விஜய்யின் மீது காதல் வந்துள்ளது, தனது காதலை சொன்னால் என்ன கூறப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்புடன் விஜய்யிடம் லவ் ப்ரபோஸ் செய்துள்ளார்.

விஜய்க்கும் இவரை பிடித்துவிட்டதால் அவரும் ஓகே சொல்லிவிட்டார், இவர்களது பெற்றோரும் பச்சைகொடி காட்டியுள்ளனர்.

இவர்களது திருமணம் அக்டோபர் 30 ஆம் திகதி சென்னையில் நடக்கவிருக்கிறது.