காரைநகரிலிருந்து வந்து யாழில் 10 குட்டிகளை போட்ட பாம்பினால் யாழ்.நகரில் பரபரப்பு!

0
1117

பாம்­புக் கடிக்கு இலக்­கா­கிய ஒரு­வர், சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.அவர் தன்­னைத் தீண்­டிய பாம்பை போத்­த­லில் அடைத்து வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்­து­வந்­துள்­ளார்.

அந்­தப் பாம்பு போத்­த­லுக்­குள்­ளேயே 10 குட்­டி­க­ளைப் போட்­ட­தால் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் நேற்­றுப் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

யாழ்ப்­பா­ணம், காரை­ந­க­ரில் நேற்­று­ முன்­தி­னம் ஒரு­வ­ருக்குப் பாம்பு தீண்­டி­யுள்­ளது. அவர் சிகிச் சைக்­காக உட­ன­டி­யாக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டார். சம்­ப­வத்­தில் காரை­ந­கரை சேர்ந்த சுப்­பி­ர­ம­ணி­யம் சிறி­ரங்­கன் (வயது – 36) என்­ப­வரே பாம்­புக் கடிக்கு இலக்­கா­கி­னார்.

தீண்­டிய பாம்பை இனம்­கா­ணும் நோக்­கில் அவர், அதனை ஓர் போத்­த­லில் பிடித்து அடைத்து வைத்­தி­ய­சா­லைக்­குக் கொண்டு வந்­துள்­ளார். அந்­தப் பாம்பு சிறிது நேரத்­தில் 9 குட்­டி­க­ளைப் போட்­டுள்­ளது. இந்­தச் சம்­ப­வத்­தால் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

பாம்­புக் கடிக்கு இலக்­கா­ன­வர் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் தொடர்ந்­தும் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­றார்.

இதேவேளை அந்தப் பாம்பு பரிசோதனையின் பின்னர் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *