தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!

0
259

தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கி அசத்தி உள்ளார் ஜாம்ஷெட்பூரை சேர்ந்த 10ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர். இதுபற்றிய கூடுதல்களையும், வீடியோவையும் இந்த செய்தியில் காணலாம்.
 தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!

ஜாம்ஷெட்பூரை சேர்ந்தவர் ஆதித்யா கோட்டே. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். வாகன தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஒரு புதிய முயிற்சியை செய்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

 தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!வாகனங்களை இயக்குவதற்கு பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிபொருளை உலகமே தேடி வரும் நிலையில், இவர் தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கி வெற்றி கண்டுள்ளார்.

 தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!இந்த மோட்டார்சைக்கிளை உருவாக்குவதற்காக பல்வேறு நூல்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து, அதில் தண்ணீரில் ஓடும் வகையில் மாற்றுவதற்கான நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!தாம் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை பரிசோதித்து பார்ப்பதற்காக சைக்கிள் ஒன்றில், பழைய மோட்டார்சைக்கிள் எஞ்சின் ஒன்றை பொருத்தியிருக்கிறார். தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!பின்னர், அந்த எஞ்சின் தண்ணீரில் ஓடும் வகையில் மாற்றங்களையும், சில கூடுதல் உதிரிபாகங்களையும் கோர்த்து, தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை தயார் செய்து விட்டார். தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!இந்த மோட்டார்சைக்கிளை தனது வீடு இருக்கும் பகுதியில் வைத்து தீவிரமாக சோதனை ஓட்டம் நடத்தி இருக்கிறார். இந்த சோதனைகளில் வெற்றியும் பெற்று இருக்கிறார். தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!இந்த மோட்டார்சைக்கிளின் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கு மட்டும், சிறிதளவு பெட்ரோல் தேவைப்படும். எஞ்சின் ஸ்டார்ட் ஆனதற்கு பின்னர் தண்ணீரில் ஓடும் என்று தெரிவித்துள்ளார். தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!இதற்காக பெட்ரோல் மற்றும் தண்ணீருக்காக இரண்டு எரிபொருள் கலன்களை பொருத்தியிருக்கிறார். 6 லிட்டர் தண்ணீரில் 25 கிமீ முதல் 30 கிமீ தூரம் வரை இந்த மோட்டார்சைக்கிள் பயணிக்கும். தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!பெட்ரோல், டீசல் வாகனங்களால் மாசு ஏற்படுவது பெரும் பிரச்னையாகி இருக்கும் நிலையில், தண்ணீரில் ஓடும் இந்த மோட்டார்சைக்கிள் மூலமாக மாசு ஏற்படுவதும் தவிர்க்கப்படும். தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார கார்களை தயாரிப்பதே ஓரே தீர்வாக கருதப்படும் நிலையில், மாணவர் ஆதித்யாவின் கண்டுபிடிப்பு அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. தண்ணீரில் ஓடும் மோட்டார்சைக்கிளை உருவாக்கிய 10ம் வகுப்பு மாணவன்!

ஐஐடி கோரக்பூர் கல்வி நிலையம் இந்த கண்டுபிடிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, காப்புரிமை பெறவும் ஆதித்யாவை அறிவுறுத்தி இருக்கிறது.

அதேசமயம், தண்ணீரில் ஓடும் இந்த மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், லிட்டர் தண்ணீரின் விலை பெட்ரோல், டீசல் விலையைவிட அதிகமாக எகிறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Source: ANI

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *