புற்றுநோய் குணமாகிவிட்டதாக நினைத்து திருமணம் செய்த பெண்: பின்னர் நேர்ந்த சோகம்

263

தோல் புற்றுநோய் குணமாகிவிட்டதாக இளம் பெண் நினைத்த நிலையில், மீண்டும் ஏற்பட்ட நோய் பாதிப்பால் அவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸை சேர்ந்தவர் லியா டிபோனோ (29). இவருக்கு பல ஆண்டுகளாக malignant melanoma என்னும் தோல் புற்றுநோய் இருந்துள்ளது.

இந்நிலையில், தொடர் சிகிச்சையின் காரணமாக கடந்த 2013-ல் லியாவுக்கு நோய் குணமாகியுள்ளது.

அதன் பின்னரும் வருடத்துக்கு நான்கு முறை தனது உடலை லியா பரிசோதனை செய்து வந்துள்ளார்.

இதனிடையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பென் என்ற இளைஞரை லியா திருமணம் செய்து கொண்டார்.

மகிழ்ச்சியாக தம்பதியின் திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் லியா கடந்த ஜனவரி மாதம் திடீரென உயிரிழந்தார்.

பின்னர் தான் லியாவுக்கு மீண்டும் தோல் புற்றுநோய் ஏற்பட்டு அது உடல் முழுவதும் பரவியதன் காரணமாக அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

2013-க்கு பின்னர் லியா தொடர் மருத்துவ சிகிச்சை மேற்க்கொண்ட போதும் மருத்துவர்கள் புற்றுநோய் மீண்டும் உருவானதை கண்டுப்பிடிக்காமல் விட்டுள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் விளக்கமளிக்க பென் மற்றும் அவர் குடும்பத்தார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

மனைவி இழப்பால் வாடும் பென் கூறுகையில், திருமணத்துக்கு பின்னர் திடீரென லியா மயங்கி விழ மருத்துவமனையில் சேர்த்தோம்.

திருமண பரபரப்பில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே அவர் மயங்கியதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

அவள் கர்ப்பமடைந்துள்ளார் எனவும் ஒரு நொடி நினைத்தேன், ஆனால் இப்படி ஆகிவிட்டது. லியா எப்போதும் என் மனைவியாகவும், ஆத்மாவாகவும் இருப்பாள் என கூறியுள்ளார்.