மனைவி உடலுறவில் உச்ச நிலை அடைகிறார் என்பதை எப்படி அறிவது?

0
1491

உச்ச உணர்வு வெளிபடுவதில் பெண்கள் போலியாகவும் சில சமயம் நடிப்பார்கள் என செக்சுவல் நிபுணர்கள் கூறுகிறார்கள். பல ஆய்வுகளில் இது உண்மை தான் என்றும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. பெண்களே இது குறித்து கருத்துக்களும். இதற்கான காரணங்களும் கூறியுள்ளனர்.
ஒருவேளை தாம்பத்தியத்தில் நாங்கள் உச்ச நிலை அடையவில்லை எனில், தங்களிடம் குறையுள்ளதாக துணை கருதிவிடுவாரோ, அல்லது உணர்வு ரீதியாக இது அடுத்த முறையான தாம்பத்தியத்தை தடுக்குமோ என்ற சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
உண்மையில் ஆண்கள் உச்ச நிலை அடைவதற்கும், பெண்கள் உச்ச நிலை அடைவதற்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. இயல்பாகவே பெண்கள் உச்ச நிலை அடைய நேரம் பிடிக்கும். இதை பலர் அறிந்திருப்பதில்லை. சில சமயங்களில் சில மருத்துவ நிலை காரணமாகவும் உச்ச நிலை எட்டுவதில் சிரமம் ஏற்படலாம்.
ஒரு பெண், நிஜமாகவே உச்ச நிலை எட்டுகிறாரா? அல்லது போலியாக நடிக்கிறாரா என்பதை இந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம்…
பிறப்புறுப்பு சுவர்கள்...

பிறப்புறுப்பு சுவர்கள்…
ஆண்கள் உச்ச நிலை எட்டும் போது கடினமாக, இறுக்கம் ஆவது போல. பெண்கள் உச்ச நிலை அடையும் போது அவர்களது பெண்ணுறுப்பு சுவர்கள் இறுக்கமாகும். நீங்கள் உடலுறவில் செயற்படும் போதோ, ஃபோர்ப்ளேவில் ஈடுபடும் போதோ, இந்த இறுக்கத்தை உணர முடியும். அதே போல, அப்பகுதியில் ஈரப்பதம் வெளிப்படுதலும் உச்சம் அடைந்ததற்கான அறிகுறி என கூறப்படுகிறது.

இதயத்துடிப்பு!
இதயத்துடிப்பு!
பெண்கள் நன்கு உச்சம் அடைகிறார்கள் எனும் போது, அவர்களது இதயத்துடிப்பு வேகமாக துடிக்கும். உறவில் ஈடுபடும் போது அவர்ளது மார்பு பகுதியல் காது வைத்து பார்த்து தான் உணர வேண்டும் என்பதில்லை. அவரை தீண்டுவதாலேயே உணரலாம்.

உடல் பதட்டம்!
உடல் பதட்டம்!
உடலில் பதட்டம் அதிகரிக்க துவங்கும், உடல் கொஞ்சம் திடமாக துவங்கும். உடலில் பெண் ஒரு ரேடியஷன் உணர்வை எட்டுவார்கள். இது உடல் முழுவதும் பரவும். இதனால் ஆண்கள் பதட்டம் அடைய தேவையில்லை. பெண்களின் கால், கைகளில் அந்த உணர்வை காண முடியும். அவர்களது நகங்கள் உங்கள் உடலை கீற துவங்கும்.

கண்கள்!
கண்கள்!
பெரும்பாலான ஆண்கள் பெண்களின் கண்களை மட்டுமே காண்பார்கள். இது மட்டும் தான் ஆண்கள் காணும் ஒரே அறிகுறி. கண்கள் மூலமும் ஒரு பெண் உச்சம் அடைவதை கண்டுணர முடியும். பெண் உச்சம் அடையும் போது, அவர்களது கண்கள் ஒரே ஃபோகஸ்ல் இருக்காது. அவர்கள் கண்கள் எட்டு திசையிலும் திரும்பிக் கொண்டிருக்கும்.

சருமம்!
சருமம்!
இது போக, பெண்களின் சருமத்தை வைத்தும் அவர்கள் உச்ச நிலை அடைகிறார்களா? இல்லையா? என்பதை கண்டுணர முடியுமாம். ஆம்! ஒரு பெண் நிஜமாகவே உச்ச நிலை அடைகிறார், அடைந்துவிட்டார் எனில், அவர்களது உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்துள்ளது என்று அர்த்தம். அப்படி அதிகரிக்கும் போது அவர்களது சருமம் கொஞ்சம் சிவந்து, வெளிர்ந்து காணப்படும்.
அதே போல, உடலுறவில் ஈடுபடும் நேரத்தை காட்டிலும், அதன் பிறகான ஆண்களின் செயல்பாட்டில் தான் பெண்களின் உச்ச நிலை அமைந்துள்ளது.

பொதுவாக கூறப்படுவது...
பொதுவாக கூறப்படுவது…
இந்த அறிகுறிகள் எல்லாம் நிச்சயம் அந்த பெண் உச்ச நிலை அடைந்துவிட்டார் என்பதற்கான அறிகுறிகள். இது போக, பெண்கள் உச்ச நிலை அடையும் போது வித்தியாசமாக ஒரு முனகல் சப்தம் இடுவார்கள், பெண்களின் உடல் நடுங்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆண், பெண் இருவரும் சரியாக உடலுறவில் ஈடுபட்டாலும், சில சமயங்களில் நாம் மேற்கூறியது போல, சில மருத்துவ நிலை காரணமாக உச்ச நிலை அடையாமலும் போக வாய்ப்புகள் இருக்கிறது. இது ஒன்றும் குறைபாடில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *