வீட்லேயே செய்யக்கூடிய 4 வித இயற்கை Hair Mask!

239

கூந்தல் மாஸ் ஏன் செய்துக்கொள்ள வேண்டும் தெரியுமா ?

இதுவரை நீங்கள் கூந்தல் மாஸ் செய்து பழகாதவராக இருக்கலாம், ஆனால் சில முறையோ அல்லது பல முறையோ, கூந்தல் பிரச்னைகளை நிச்சயம் சந்தித்து இருப்பீர்கள். கூந்தல் வறண்டு விடுவது, தொடர்ந்து சிக்கு ஆகிவிடுவது, கூந்தலில் துர்நாற்றம் வீசுவது, பொடுகு தொல்லை, கூந்தல் பிசுபிசுப்புத் தன்மை என கூந்தல் சார்ந்த பல பிரச்னைகளை பலர் தினம்தோறும் சந்திக்கின்றனர். இந்த பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண , பாதுகாப்பான ஒரே வழி இயற்கை வழிகள் மட்டுமே. வீட்லேயே செய்யக்கூடிய இயற்கையான ஹேர் மாஸ்க் தரும் பயன்கள் என்ன? கூந்தல் மாஸ்க் எப்படி தயாரிக்க வேண்டும்? அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? அன்றாடும் கூந்தலை பராமரிப்பது எப்படி? போன்றவைகளை பற்றி தெரிந்துக்கொள்ள வீடியோவை பாருங்கள் !

https://youtu.be/GVuOt3NJ4pY

3 முக்கிய காரணங்களுக்காகவே இயற்கையான கூந்தல் மாஸ் செய்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

1. மீட்க உதவும் :

தொடர்ந்து உங்கள் கூந்தலுக்கு நீங்கள் எப்படிப்பட்ட Hair conditioner, Hair Dryer Hair Cream, Hair Dye போன்றவைகளை பயன்படுத்துபவராக இருக்கலாம். ஆனால் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை இயற்கையான கூந்தல் மாஸ்க்குகளை பயன்படுத்தினால் போதும். விரைவாக உங்கள் கூந்தல் இயல்பான தன்மைக்கு மாற்றம் பெற உதவும்.

2. கூந்தலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் :

கூந்தல் வறண்டுவிடுவதை கட்டுப்படுத்த ஈரப்பதம் அவசியம், மட்டுமில்லாமல் தலைமுடியின் வேர் பகுதியில் செல்கள் ஆரோக்கியமற்று காணப்படும். நீர் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கூந்தல் மாஸ்க்குகள் கூந்தலை ஆரோக்கியமாக்கிட உதவும்.

hair mask
3. பிரகாசிக்க உதவும் :

கூந்தலை மென்மையாக வைத்திட, பல கண்டிஷனிங் ஏஜெண்ட்களை பயன்படுத்துகிறோம். இவை உடனே தீர்வு தந்தாலும் நீண்ட நாட்களுக்கு அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று கூற முடியாது. இதனால் கூந்தலில் மற்ற பிரச்னைகள் வரலாம். இயற்கை பொருட்களில் இயற்கையாக இருக்கும் தன்மையே கூந்தலை மென்மையாக்கிறது இதனால் மற்ற பக்கவிளைவுகள் வர வாய்ப்பில்லை.