கடையில் இனிப்புகளை ருசித்து சாப்பிட்ட எலி! கடைக்கு வந்த சோதனை..? வைரல் வீடியோ!!

0
184

இந்தியாவின் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய பஸ் நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்வதால் 24 மணி நேரமும் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கடை ஒன்றில், கண்ணாடி பெட்டிக் குள் வைக்கப்பட்டுள்ள இனிப்புகளை எலி ஒன்று ருசித்து சாப்பிடுவது போன்ற வீடியோ “வாட்ஸ் அப்”பில் வெளி வந்தது.

ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில், கடைக்காரர் வியாபாரத்தை மும்முரமாக கவனித்துக் கொண்டிருக்க, எலியோ கண்ணாடி பெட்டிக்குள் ஏறி, உள்ளே வைக்கப்பட்டுள்ள இனிப்புகளை ருசித்து சாப்பிடும் காட்சி இடம் பெற்றிருந்தது.

இதையடுத்து அந்த கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, மேலும் அந்த கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதேபோல அந்த கடையில் இருந்த இனிப்பு பலகாரங்கள் அனைத்தும் கொட்டி அழிக்கப்பட்டன.

இதன் காரணமாக ஓசூர் பஸ் நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை கிருஷ்ணகிரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி புஷ்பராஜ் தலைமையிலான அதிகாரிகள் அந்த கடைக்கு சென்று, சுகாதாரமற்ற முறையில் அந்த கடையை நடத்தியதாக ‘சீல்’ வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *