கற்பை இணையத்தில் ஏலம் விட்ட இளம்பெண்: தாயார் எடுத்த அதிரடி முடிவு

0
328

நெதர்லாந்தில் இளம்பெண் ஒருவர் தனது கற்பை இணையத்தில் ஏலம் விட்ட நிலையில், அவரது வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

நெதர்லாந்தில் குடியிருக்கும் லோலா என்ற 18 வயது இளம்பெண், தாம் இதுவரை கன்னித்தன்மையை இழக்கவில்லை எனவும், தமது கற்புக்கு 20,000 யூரோ துவக்க விலை எனவும் கூறி பிரபல Escorts நிறுவனத்தில் பதிவு செய்துள்ளார்.

மட்டுமின்றி இதுதொடர்பாக ஒரு காணொளி பதிவு ஒன்றையும் குறித்த நிறுவனம் சார்பில் தமக்காக ஒதுக்கப்பட்ட பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இளம்பெண் லோலாவின் புகைப்படமும் அவரது காணொளியும் வைரலானதை அடுத்து குறித்த இணையத பக்கத்தின் வாடிக்கையாளர்கள் பலரிடம் இருந்தும் விசாரணை வந்துள்ளது.

https://youtu.be/GV9__wQFnFs

இந்த தகவல் அவரது தாயாருக்கு தெரிய வந்ததும் கொதித்துப் போன அவர், தமது மகளை கடுமையாக கண்டித்துள்ளதுடன், குறித்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு தமது மகளது புக்கைப்படம் மற்றும் காணொளியை இணையத்தில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், அந்த நிறுவனமானது லோலாவின் புகைப்படத்தை நீக்க மறுத்துள்ளதுடன், போதுமான விசாரணைக்கு பின்னரே தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் புகைப்படத்தை பிரசுரித்ததாகவும், ஆனால் குறித்த இளம்பெண்ணின் தாயார் கூறுவது போன்று மன நிலை பாதிக்கப்பட்ட பெண் போன்று அவரது நடவடிக்கை இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தமது மகளை காப்பாற்றும் பொருட்டு, குறித்த Escorts நிறுவனத்திடம், தமது மகள் மன நிலை பாதிக்கப்பட்டவள் எனவும் தொடர் சிகிச்சையில் இருப்பதாகவும், விளையாட்டாகவே தமது புகைப்படத்தை அந்த நிறுவனத்தில் பதிந்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

இதனிடையே பிரச்னைக்குள்ளான Escorts நிறுவனத்தினர் லோலாவின் புகைப்படத்தை நீக்கியதுடன், அவரது ஏலம் விடப்பட்ட பக்கத்தையும் நீக்கியுள்ளது.

விவாதத்துக்குரிய Escorts நிறுவனமானது இந்த ஆண்டு துவக்கத்தில் Aleexandra Khefren என்ற ரோமானிய மொடலால் உலகம் முழுவதும் பிரபலமானது.

குறித்த ரோமானிய மொடல் தமது கற்பை 2 மில்லியன் பவுண்டுக்கு ஹாங்காங் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு விற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *