ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்த காவலரின் பரிதாப நிலை: வெளிச்சத்திற்கு வந்த உண்மை

0
1062

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினாவில் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், நாளைடைவில் உலகமே திரும்பி பார்க்க வைக்கும் போராட்டமாக மாறியது.

இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமானவர் தான், காவலர் மாயழகு, இவர் போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, திடீரென்று உள்ளே நுழைந்து போலீஸ் சீருடையில், திடீரென மைக் பிடித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விவசாயத்துக்கு ஆதரவாகவும் பேசினார்.

அப்போது, இது ஒரு துவக்கம்தான் என்றும், இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.

இது நியாமான போராட்டம் என்றும் தான் பேசுவதை பல காவலர்கள் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து தற்போது சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டதை ஆதரித்த காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடியும் வரை ஆயுதப்படை காவலர் மாயழகுக்கு பதவி, ஊதிய உயர்வு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *