நண்பரை உயிரோடு புதைத்து கொலை செய்த கொடுர சம்பவம்!!!! எதற்காக தெரியுமா?

548

தஞ்சாவூரை சேர்ந்த சரவணன் இவர் முதலாம் ஆண்டு கேட்டரிங் படித்துக்கொண்டே திருமண நிகழ்ச்சிகளில் டிரம்ஸ் வாசித்து சம்பாதிப்பவர்.

கடந்த மாதம் 30 ஆம் தேதி இசை நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சரவணனின் பெற்றோர் தவித்து வந்தனர். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் சரவணனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரவணனின் நண்பர் ஒருவர் சரவணை கொலை செய்து விட்டார்கள் என்று போதையில் கூறியுள்ளார். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினர் விசாரணையில் சரவணன் அவரது நண்பர்களால் உயிரோடு புதைக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.

சரவணின் நண்பர்களான மாட்டுவடியில் மணல் திருடும் ஆனந்த், நந்தக்குமார், நவனீத கிருஷ்னன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில்,ஆனந்தின் சகோதரியை சரவணன் காதலித்துவந்ததாக கூறப்படுகிறது.

காதலியுடன் தனிமையில் சேர்ந்து எடுத்துக்கொண்ட வீடியோவை அவர் வாட்ஸ் ஆப்பில் பரப்பியதால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் இவ்வாறு கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

வழக்கம் போல மணல் திருடசெல்லும் போது சரவணனையுன் வெண்ணாற்றங்கைரைக்கு அழைத்துச் சென்று உயிரோடு கை கால்களை கட்டி நடுஆற்றில் புதைத்து வீட்டு ஒன்றும் தெரியாதது போல இருந்துள்ளது பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆற்றிற்க்குள் புதைக்கப்பட்டிருந்த சரவணனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.