நிமிடத்திற்கு நிமிடம் – வயாகரா உட்கொண்ட பின் ஆண்குறியில் உண்டாகும் தாக்கங்கள்!

674

நாற்பது வயதில் இருந்து ஆண்கள் மத்தியில் விறைப்பு தன்மை குறைய வாய்ப்புகள் உண்டு. இதற்கான சிறந்த தீர்வாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருவது வயாகரா.

Minute by minute, How the Viagra Pill Really Works on Your Penile?

இது ஆண்களின் உடலில் எப்படி செயற்படுகிறது? எப்படிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தி விறைப்பு தன்மை அதிகரிக்க செய்கிறது? வயாகரா உட்கொண்ட பிறகு உடலில் நிமிடத்திற்கு, நிமிடம் ஏற்படும் விளைவுகள் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இங்கு காணலாம்…
12 நிமிடங்கள்!

12 நிமிடங்கள்!

முதல் 12 நிமிடத்தில் வயாகரா மருந்து உடலால் முழுமையாக உள்வாங்கப்படுகிறது. உடனடியாக இது விறைப்பு தன்மையை அதிகரிக்க செய்கிறது. இரத்த நாளங்களை இலகுவாக்கி, இரத்த ஓட்டத்தை வேகப்படுத்துகிறது.

விறைப்பு தன்மையால் பாதிப்பட்ட ஆண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், வயாகரா 12 நிமிடத்தில் தாக்கம் ஏற்படுவதை அறிந்ததாக கூறப்பட்டுள்ளது.

27 நிமிடங்கள்!

27 நிமிடங்கள்!

15 நிமிடங்கள் வரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனில், விறைப்பு அரை மணிநேரத்தில் ஏற்படும். இந்த காலத்தில் வயாகரா மருந்து PDE5 எனும் என்சைம் மூலமாக இரத்த ஓட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் ஆண்குறி பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாக செல்லும். சராசரியாக வயாகரா மருந்தின் தாக்கம் ஆரம்பமாக 27 நிமிடங்கள் ஆகும். இது சராசரி தான், ஒவ்வொரு ஆணின் உடல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்து இது வேறுபடும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

57 நிமிடங்கள்!

57 நிமிடங்கள்!

வயாகரா உட்கொண்ட 57 நிமிடங்களில் இந்த மருந்து தனது அதிக பட்ச தாக்கத்தை அளிக்கிறது. இந்த நேரத்தில் இரத்த ஓட்டம் தனது உயர் நிலையை அடையும்.

இதனால் தான் மருத்துவ நிபுணர்கள் வயாகரா மருந்தை ஓரிரு மணிநேர இடைவேளைக்கு பிறகு பயன்படுத்த கூறுகின்றனர்.

சராசரியாக வயாகரா மருந்து உட்கொண்டால் 33 நிமிடங்கள் வரை விறைப்பு நீடிக்க வாய்ப்புண்டு.

4 மணிநேரம்!

4 மணிநேரம்!

இந்த மருந்தை உட்கொண்ட நான்கு மணி நேரத்தில் ஐம்பது சதவீத தாக்கம் குறைய ஆரம்பிக்கும். இதனால் உட்கொண்ட நபர் உடலுறவில் ஈடுபட முடியாது என கூற முடியாது. அதன் பிறகு அந்த ஆணின் இயல்பு விறைப்பு நிலைக்கு திரும்பும்.

10 மணிநேரம்!

10 மணிநேரம்!

சில ஆண்கள் மத்தியில் மருத்துவர்கள் பத்து மணிநேரம் கழிந்த பிறகும் கூட வயாகரா மருந்தின் தாக்கத்தை கண்டதாக கூறுகின்றனர்.

வயாகரா உட்கொண்ட போது 23 நிமிடங்கள் வரை நீடிக்கும் விறைப்பு தன்மை. 10 மணி நேரத்திற்கு பிறகு 12 நிமிடங்களாக குறைகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உண்மைகள்!

உண்மைகள்!

இரத்த ஓட்டத்தை அதிகரித்து. அதன் மூலமாக விறைப்பை ஊக்குவிக்கிறது வயாகரா.
CGMP மூலமாக இரத்தநாளங்கள் இலகுவடைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்க இத வழிவகுக்கிறது.
வயாகரா மூலம் பால்வினை நோய் தாக்கத்தை எல்லாம் தடுக்க முடியாது.
பக்கவிளைவுகள்!

பக்கவிளைவுகள்!

தலைவலி
செவி திறன் குறைதல்
கண் பார்வை குறைபாடு
செரிமான குறைபாடு
உணர்வின்மை
மார்பு, கழுத்தும், தாடை, தோள் பகுதியில் கூச்ச உணர்வு!