மருத்துவ ரகசியம்!. அரைஞாண் எதற்கு இதை நாம் அணிந்து கொள்ள வேண்டும்

0
634

Image result for அரைஞாண் எதற்குமருத்துவ ரகசியம்!.

அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க. .உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமாநிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்…. Image result for அரைஞாண் எதற்குஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.
இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது. உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை குடல் இறக்க நோய்‘ ஆங்கிலத்தில்
ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன.இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள். இப்போது வெள்ளி,தங்கத்தில் அறுணாக்
கொடி கட்டுகிறார்கள் தான். 
Image result for அரைஞாண் எதற்குஅது பகட்டுக்கு. சில விசயங்கள்நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும்
கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத்தான்
செய்கிறார்கள்.நம் முன்னோர்கள் பாரம்பரியத்தை நம் பிள்ளைகளுக்கு ஆதாரத்தோடு கற்பிப்போம்… உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும்
தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *