நாப்கின் விளம்பரத்தில் ரத்தப்போக்கை ஊதா நிறத்தில் காட்டுவது ஏன்?

0
325

மாதவிடாய் என்பது பெண்களுக்கு வரக்கூடிய இயல்பான ரத்த சுழற்சி. அது அருவருப்பான விஷயம் கிடையாது. மற்றவர்கள் நம்மைக் கேலி செய்துவிடுவார்களோ என்கிற எண்ணமும் ஆடையில் கறை பட்டுவிடுமோ என்கிற தயக்கமுமே மாதவிடாய் நாள்களில் பெண்கள் அனுபவிப்பது. மாதவிடாய் நாட்களில் எப்படி ஹார்மோன் சுழற்சி ஏற்படுகின்றது.

கருவுறுதல் நடக்காதபோது அண்டகம் (ovary) ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடும். ஹார்மோன்கள் இல்லாததால், கர்ப்பப்பை சுவருக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும். இதனால், கர்ப்பப்பையின் சுவர் செல்கள் இறந்து, அழிவுக்கு உட்படுத்தப்படும். இறந்த கர்ப்பப்பை சுவர் செல்கள், ரத்தம் மற்றும் திசு திரவம் இணைந்து வெளியேறும்.

இப்படி வெளியேறும் திரவம்தான் `மாதவிடாய்’ எனப்படும். இந்த நிலை மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு நடைபெறும். இந்தச் சுழற்சி மீண்டும் முதலிலிருந்து தொடங்கும்.

சில தலைமுறைகள் வரை பெண்களின் பூப்பெய்தும் சராசரி வயது பதினைந்து என்று இருந்தது. இப்போதெல்லாம் 10, 11 வயதுக் குழந்தைகளும் பூப்பெய்யும் சூழலுக்குள் (உடலளவில் மட்டுமே) தள்ளப்படுகிறார்கள். ஜங்க் ஃபுட், உணர்ச்சிவசப்படவைக்கும் மீடியாக்கள், உடல் உழைப்பின்மை, படிப்பு மற்றும் குடும்பத்தினரின் அன்பு பரிமாற்ற குறைவால் உருவாகும் மனச்சோர்வு என எத்தனையோ காரணங்கள்.

மாதவிடாய் குறித்த நிலை இப்படியிருக்க, ஒரு பெண் தன் வாழ்நாளில் 16,800 மாதவிடாய் பட்டைகளைப் (Sanitary Pads) பயன்படுத்துவதாகச் சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இவை தான் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்றது.சுழற்சி ஏற்படுகிறது. இதில் மறைப்பதற்கும் முகம் சுளிப்பதற்கும் ஒன்றுமில்லை.

இந்த உலகில் பிறந்த எல்லாப் பெண்களும் மாதவிடாயைக் கடந்துதான் வரவேண்டும். இப்படி இருக்க, நாப்கினை விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள், அந்த நாப்கின் ரத்தத்தை உறிஞ்சும் என்று காட்டுவதற்காக ஊதா நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள். இயற்கையில் மாதவிடாய் ஏற்படும்போது, சிவப்பு நிறத்தில்தானே ரத்தம் வெளியேறும்.

இதைச் சிவப்பு நிறத்தை ஊற்றி பரிசோதனை செய்வதால், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லையே. பிறகு ஏன் ஊதா நிறத்தைக் காட்ட வேண்டும் என்கிற எண்ணம் எழுகிறது. ஆண்களுக்கு மாதவிடாய் புரிதல்கள் நிச்சயம் இருக்கும். அப்படி இல்லாவிடில், இதன்மூலம் அவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே.

அது ஒன்றும் மறைத்துச் செய்கிற விஷயம் கிடையாது. அடிபட்டால் ஒட்டுவதற்கு பேண்டேஜை அறிமுகப்படுத்தினால், அப்போது சிவப்பு நிறத்துக்குப் பதில் ஊதா நிறத்தையா காட்டுவீர்கள்?

இதுகுறித்து பெண்கள் மத்தியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்துவந்தன. இந்நிலையில், ‘பாடி ஃபார்ம் (Bodyform)’ என்கிற நிறுவனம், தன்னுடைய விளம்பரத்தில் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கை நாப்கின் உறிஞ்சுவதைச் சிவப்பு நிறத்திலேயே காட்டியிருக்கிறார்கள்.

உள்ளதை உள்ளபடி காட்டலாமே என்று பெண்கள் மத்தியில் இருந்த குறையை இந்நிறுவனம் பூர்த்திசெய்துள்ளது. மாதவிடாயும் இயல்பான ஒன்று அதை இயல்பாகவே காட்டலாம் என்று விளம்பரப்படுத்திய அந்த நிறுவனத்துக்குப் பெண்களிடம் லைக்ஸ் குவிந்துள்ளது. விளம்பரத்தைக் காண..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *