தங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்.. 3 மாதத்தில் நடந்த விபரீதம்…

602

மைசூரு அருகே உள்ள சுத்தூரை சேர்ந்தவர் ரசிகா (23). இவர் கோசனஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த காவ்யா என்பவரை காதலித்து வந்தார். இவர் ரசிகா தாயின் அக்கா மகள் ஆவார்.

இது தெரிந்த பெற்றோர் தங்கை முறை கொண்டவளை ஏன் காதலிக்கிறாய் என எதிர்த்தனர்.

ஆனால் இருதரப்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 3 மாதத்திற்கு முன்பு நஞ்சன்கூடு கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டார். பின்னர் 3 மாதத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் மனமுடைந்த ரசிகா தன் மனைவியின் சொந்த ஊரான கோசனஹள்ளியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மைசூர் ஊரக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.