நக வெட்டி கத்தியால் இதயத்தை கிழித்து கொன்றேன்: பல் டாக்டரின் அதிர்ச்சி வாக்குமூலம்

384

மாமல்லபுரத்தில் முன்னாள் மனைவியின் கள்ளக்காதலனை செந்தில்ராஜ் என்ற பல் மருத்துவர் ஒருவர் இதயத்தில் குத்தி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், பல் மருத்துவம் முடித்துள்ள நான் பல்லாவரத்தில் டாட்டூ ஸ்டூடியோ நடத்தி வருகிறேன்.

அந்த பகுதியில் உள்ள நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். பின்னர் எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாங்கள் இருவரும் விவாகத்து பெற்றுக்கொண்டோம்.

இதற்கிடையில், எனது நிறுவனத்தில் பணியாற்றிய சஞ்சீவ் என்ற நபருடன் எனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. எனது நிறுவனத்தில் பணியாற்றிய சஞ்சீவ் சில மாதங்கள் கழித்து வேறு ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றினார்.

சஞ்சீவ்க்கும் எனது மனைவி நித்யாவும் கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். விவாகரத்து பெற்றாரும் நித்யா என்னுடன் தொடர்பில் இருந்தார். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு மாமல்லபுரத்தில் நித்யா தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்கு எனக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அங்கு சஞ்சீவை தீர்த்துக்கட்ட திட்டம்போட்டேன். மரு அருந்திய பின்னர் சஞ்சீவ் எனது அருகில் போதையில் இருந்தார். அப்போது நகர் வெட்டியில் உள்ள சிறிய கத்தியால் சஞ்சீவின் இதயத்தை கிழத்ததில், சம்பவ இடத்திலேயே அவன் உயிரிழந்தான்.

அதன்பின்னர் அங்கிருந்து தப்பித்துவிட்டேன் என பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைதான செந்தில்ராஜ் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.