நடிகை சன்னி லியோன் தமிழில் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

229

தமிழில் ஜெய் நடிப்பில் வெளியாகி இருந்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் சன்னி லியோன், இதனையடுத்து தற்போது ஒரு படத்தில் நாயகியாகவே நடிக்க உள்ளார்.

வடிவுடையான் இயக்கும் வரலாற்று கதையம்சம் உள்ள இந்த கதையில் சன்னி லியோனுக்கு நயன்தாராவுக்கு இணையான சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

இதனையடுத்து தற்போது இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது வரும் 27-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.