ஆட்சியர் ரோகிணி கேட்ட ஒற்றை வார்த்தை..? மளமளவென குவியும் தொழிலதிபர்கள்.. தமிழகமே திரும்பி பார்க்கும் நிகழ்வு..!!

2655

Image result for ஆட்சியர் ரோகிணி

சேலம் மாவட்டத்தில் சுகாதார பணிகள், நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தி ஆட்சியர் ரோகிணி மக்களை கவர்ந்து வருகிறார்.

சேலம் மாவட்டத்தின் ஆட்சியரான ரோகிணி தான் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே மக்கள் நலன்சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறார்.

தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலரான ராதாகிருஷ்ணன் முன்பு சேலம் ஆட்சியராக இருந்தபோது செயல்பட்ட வேகத்தினையும் சுறுசுறுப்பினையும் அவருக்குப் பின், தற்போதைய ஆட்சியர் ரோகிணியிடத்தில் காண்கிறோம் என்றும், மக்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை அவர் கட்டாயம் எடுப்பார் என தாங்கள் நம்புவதாகவும் சேலம் மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

மக்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாரே அவரது தற்போதைய திட்டங்களும், செயல்பாடுகளும் இருக்கிறது.

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, ”எனது சேலம் எனது பெருமை” என்ற புதிய அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் மாவட்ட வளர்ச்சிக்குப் பாதை வகுத்திருக்கிறார்.

மத்திய அரசு, மாநில அரசுகள் மட்டுமல்லாமல் மாவட்டத்தில் இருக்கும் சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் இவற்றின் பங்களிப்புகளைப் பெற சமூகப் பொறுப்பு குறித்தான கருத்தரங்கம் நிகழ்ச்சியை நடத்தி மாவட்ட வளர்ச்சிக்குப் பெரும் நிதியைத் திரட்டி இருக்கிறார்.

சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசு நலத்திட்ட உதவிகளுக்கான நிதிகள் போதுமானதாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே செய்யப்படுவதால் இடைவெளியை நிரப்புவதற்குப் பெரு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புகள் அவசியம் தேவைப்படுகிறது என்று தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து,  `எனது சேலம் எனது பெருமை’ என்ற பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி இருக்கிறோம்.

அதில் யார் வேண்டுமானாலும் அரசுக்கு நிதி கொடுக்கலாம், கொடுக்கும் பொழுது என்ன செயலுக்காக நிதி வழங்குகிறோம் என்று எழுதி பணத்தைப் போட்டால் அந்தப் பணியை விரைவாகச் செய்து முடிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். இதற்காக  பலரும் நிதியுதவி அளிக்க தொடங்கி விட்டனர்.

தமிழ்நாட்டிலேயே ஒரு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இப்படியொரு திட்டம் கொண்டுவரப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.