இறந்த தாயின் வயிற்றில் இருந்து 4 மாதம் கழித்து பிறந்த குழந்தை…

527

செல்வா ஜம்போலி என்ற 21 வயதுடைய பெண் ஒக்டோபர் மாதம் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். அதே நேரத்தில் அவர் பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அதற்கான சிகிச்சை எடுத்துவந்துள்ளார். சிலநாட்களில் உடல் நலக்குறைவால் மிகவும் பாதிக்கபட்ட செல்வா மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் செல்வா மூளை சாவு அடைந்தது தெரியவந்தது. மேலும் ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரின் வயிற்றில் இருப்பது இரட்டை குழந்தைகள் எனவும் குழந்தைகள் ஆரோக்கியாமாக உள்ளதாகவும் தெரிந்தது.

123 நாட்கள் மூளை சாவு அடைந்த தாயின் வயிற்றில் இருந்த குழந்தைகள் குரைபிரசவமாக அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளது.