ஏழரை.. ஆட்டம் ஆரம்பம்! மாற்றம் தரும் ராசிக்கு ஏற்ற அதிர்ஷ்ட நிறங்கள்!

1091

ஏழரை சனி பகவானின் மாற்றத்தால் பல்வேறு நன்மை, தீமைகள் இடம்பெறவுள்ளது. அதனை தீர்மானிப்பதில் நிறங்களும் முக்கிய இடம்பெறுகின்றது. அந்த வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிறங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் படியுங்கள்..

மேஷம்

செவ்வாய் கிரகத்தை ஆட்சி நாதனாக கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு 2018ல் சிவப்பு நிறம் யோகமல்ல. அதிஷ்ட நிறமாக புத்தாண்டில் பச்சை, வெள்ளை, எலுமிச்சை பச்சை, மரகத பச்சை போன்ற நிறம் கொண்ட ஆடைகளை அணியலாம். இதனால் வெற்றிகள் கூடி வரும்.

ரிஷபம்

சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே. அழகியலில் ஆர்வம் கொண்ட உங்களுக்கு இந்த 2018ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறமும், குங்குமச்சிவப்பும் சிறந்த நிறங்களாகும். இந்த நிறத்தில் ஆடைகளை அணிந்தால் வாழ்க்கையில் பாசிட்டிவ்வான மாற்றங்கள் ஏற்படும்.
மிதுனம்

புதன் கிரகம் ஆட்சி செய்யும் மிதுன ராசிக்காரர்களுக்கு 2018ஆம் ஆண்டு வெண்மை, வெளிரிய சாம்பல் நிறங்கள் அதிஷ்டமாகும். அதே நேரத்தில் புதன் கிழமைகளில் பச்சை வண்ண ஆடைகளை அணிந்தால் நல்லது.

கடகம்

நீர் ராசியான கடகத்தை சந்திரன் ஆட்சி செய்கிறது. 2018ஆம் ஆண்டில் கடக ராசிக்காரருக்கு நீலநிறம், சிவப்பு வண்ணங்கள் அதிஷ்டத்தை அள்ளித்தரும். அதே நேரத்தில் திங்கள் கிழமைகளில் வெண்மை நிறம், கடல் பச்சை நிறங்களை உபயோகிப்பது நல்லது.

சிம்மம்

நவகிரகங்களின் அரசன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிகாரர்களுக்கு 2018ஆம் ஆண்டில் வெள்ளை மற்றும் தங்க நிறங்கள் அதிஷ்டத்தை அள்ளித்தருமாம். அது மட்டுமின்றி வெளிறிய நிறங்கள், தாமிர நிறம் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடியதாகும்.

கன்னி

புதன் கிரகத்தால் ஆளப்படும் கன்னி ராசிகாரர்களுக்கு பச்சை, நீலம் அதிர்ஷ்ட நிறமாகும். இந்த நிற ஆடைகளை அணிந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். புதன் கிழமைகளில் பச்சை நிறத்தில் ஆடைகளை அணியலாம்.

துலாம்

துலாம் ராசிகாரர்களுக்கு சுக்கிரன் ஆட்சிநாதன். 2018ஆம் ஆண்டில் வெள்ளை, பச்சை, நீல நிற ஆடைகள் ஏற்றவை. இந்த ஆடைகளை அணிய லக்கிதான். வெள்ளி கிழமைகளில் சந்தன நிறம் அணியலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிகாரர்களுக்கு கருப்பு அல்லது வெள்ளை நிறம் 2018ல் அதிர்ஷ்ட நிறமாகும். வேலைக்கான இண்டர்வியூ போன்றவைகளுக்கு செல்லும் போது இந்த நிறங்களில் ஆடைகளை அணியலாம்.

தனுசு

குரு பகவானால் ஆட்சி செய்யப்படும் தனுசு ராசிகாரர்களுக்கு 2018ல் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் அதிர்ஷ்டமானதாகும். அதே நேரத்தில் மஞ்சள் நிற ஆடைகளை வியாழக் கிழமைகளில் உடுத்தினால் நல்லதே நடக்கும்.

மகரம்

சனியால் ஆளப்படும் மகர ராசிகாரர்களுக்கு நீலம், பச்சை, அன்னாசி நிறம் அதிர்ஷ்டமானதாகும். சனிக்கிழமைகளில் கருப்பு ஆடைகளை அணிந்தால் அதிர்ஷ்ட தேவதை கண் சிமிட்டுவாள்.

கும்பம்

சனிபகவான் ஆட்சி செய்யும் கும்பம் ராசிக்காரர்கள், சிவப்பு, பச்சை, ஸ்கை ப்ளூ நிறங்களை அணிய அதிர்ஷ்டமாகும். சனிக்கிழமைகளில் ஊதா அல்லது மிட்நைட் ப்ளூ ஆடைகளை அணிய அணிந்தால் சிறப்பான வாழ்க்கையாக இருக்கும்.

மீனம்

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிகார்ர்களுக்கு 2018ல் இளம் பச்சை நிறத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். வியாழக்கிழமையன்று வெளிரிய மஞ்சள் நிற ஆடை அணிய அதிர்ஷ்டம் கிடைக்கும்.

  • ஞாயிறு முதல் சனி வரை ஞாயிறன்று சிவப்பு , இளம் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறமும் அணியலாம்.
  • திங்கட்கிழமையன்று வெண்மை மற்றும் இளம் ஊதா நிறம் சுபம் தரும்.
  • செவ்வாய் கிழமைகளில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்திலும் அணியலாம்.
  • புதன்கிழமையில், பச்சை ஆடையும், வியாழக்கிழமை மஞ்சள் நிறமும் உகந்தது.
  • வெள்ளி, கடல் நீலம், வெண்மை நிறம் அணியலாம்.
  • சனிக்கிழமை நீலம், கருப்பு நிற ஆடை அணியலாம்.