வேறு யாருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்? கோஹ்லி வரவேற்பு நிகழ்ச்சியில் இலங்கை ரசிகர்

570

இலங்கை அணியின் தீவிரரசிகரான கயன் சேனநாயக்க கோஹ்லியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய வீரர்கள் பலருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லியின் இரண்டாவது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் உள்ள st regis astor ballroom-ல் நடைபெற்றது.

இதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இலங்கை அணியின் தீவிர ரசிகரான Gayan Senanayake கோஹ்லியின் வரவேற்பு நிகழ்ச்சி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி கலந்து கொண்ட இவரிடம் கோஹ்லி-அனுஷ்கா செல்பி எடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த சச்சின், பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பலருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்திய வீரர்கள் யாருடன் ஒருவருடனாவது புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைக்குமா என்று அனைவரும் காத்திருக்கும் வேளையில் Gayan Senanayake-விக்கு கிடைத்திருக்கு வாய்ப்பு போன்று வேறு யாருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்வி குறிதான், மேலும், இதை சமூகவலைத்தளங்களில் கண்ட பலரும் கோஹ்லி ஒரு ஜெண்டில் மேன் என்று கூறி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.