கரு முட்டைகளின் உருவாக்கத்தை அதிகரித்து விரைவில் கருவுற சிறந்த மூலிகை!

400

கரு முட்டைகளின் உருவாக்கத்தை அதிகரித்து விரைவில் கருவுற சிறந்த மூலிகை!

விழுதி இலைகளை நன்கு அலசி சாறெடுத்து, அதில் கால் தம்ளர் அளவு நல்லெண்ணை சேர்த்து தினமும் பருகி வர, கரு முட்டைகளின் உருவாக்கம்அ திகரித்து, விரைவில் கருவுற்று, நலமுடன் மகவீனும் தன்மை ஏற்படும். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…

மூட்டுகளில் நீர் கோர்த்துக்கொண்டு வலி, வீக்கம் ஏற்பட்டு துன்புறுபவர்கள் எல்லாம்,சிறிது விழுதி இலைகள், சில மிளகுகளை எடுத்து தூளாக்கி, பூண்டு சில
பற்கள், சீரகம் சிறிது எடுத்துக்கொண்டு, விளக்கெண்ணையில் வதக்கி தாளித்து, இரசம் போல உணவில் சேர்த்து சாப்பிட்டு வர, மூட்டுகளில் சேர்ந்த நீர் வடிந்து,
உடல் வலிகள் நீங்கும்.

கபம் எனும் சளி, இருமல் ஜுரம் போன்ற பாதிப்புகள் விலக, விழுதி இலைகளை அரைத்து, சாறெடுத்து, அதை நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி,
தலையில் தடவி குளித்து வர, இருமல் ஜுரம் போன்ற பாதிப்புகள் அகன்று விடும். அது மட்டுமல்ல, உடலில் உள்ள சகல வியாதிகளையும் சரியாக்கி விடும் தன்மை
படைத்தது, இந்த விழுதி எண்ணைச்சாறு என்கின்றன சித்த நூல்கள்.

பல்வலி, பல் ஈறுகளில் இரத்தம் வடிதல் போன்ற பல் சம்பந்தமான பாதிப்புகள் நீங்க, சில விழுதி இலைகளை நன்கு அலசி, தண்ணீரில் இட்டு சுண்டக் காய்ச்சி,
பிறகு ஆற வைத்து, அந்த நீரைக் கொண்டு, வாயை கொப்புளித்து வர, பல் வலி, ஈறுகளில் ஏற்படும் இரத்தம் வடிதல் போன்ற அனைத்து பல் தொடர்பான பாதிப்புகள்
நீங்கி விடும்.

குழந்தைகள் சிலருக்கு எவ்வளவு நல்ல உணவுகள் சாப்பிட்டாலும், உடல் தேறாமல். இளைத்தும், சோர்ந்தும் காணப்படுவர். அவர்களின் அந்த நிலைக்குக்
காரணமானவை, வயிற்றில் உள்ள புழுக்கள், இவற்றை அழிக்க, விழுதி இலைகளை அரைத்து, சாறெடுத்து, தேனுடன் கலந்து தினமும் இரவில் பருகி வர, புழுக்கள்
விரைவில் அழிந்து, உடல் தேறி, பொலிவாகும்.

அழிஞ்சில் எனும் மூலிகையின் வேருடன், விழுதி வேரை ஒரே அளவில் எடுத்துக் கொண்டு அவற்றை சிறு துண்டுகளாக வெட்டிச் சேர்த்து, சில நாட்கள் நிழலில் உலர்த்தி, மண் பானையில் போட்டு குழித்தைலம் எனும் முறையில் தயாரித்து, புரையோடி இருக்கும் காயத்தில் தடவி, மெல்லிய துணியால் கட்டு கட்டிவர, புரையோடியிருந்த ஆறாத காயங்கள் எல்லாம், விரைவில் ஆறி விடும்.

குழித்தைலம் செய்முறை:
குழித்தைலம் என்பது, தோட்டத்தில் இரண்டடி ஆழத்தில் ஒரு குழியை வெட்டி, அதில் வாயகன்ற ஒரு சிறிய பீங்கான் அல்லது மண் பாத்திரத்தை வைத்து, அதன் மேல் புறம், அழிஞ்சில் வேர், விழுதி வேர் சேர்ந்த மண் பானையை வைக்க வேண்டும். மண் பானையின் அடிப்பகுதியில், சில ஓட்டைகள் இட வேண்டும்.
அந்த ஓட்டைகள் கீழே உள்ள பீங்கான் பாத்திரத்தின் உட்புறம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், மண் பானையின் வாயை இறுக்கமாக மூட, மூடியை பானையின் வாயில் ஒரு மெல்லிய பருத்தித் துணியைக் கொண்டு களிமண்ணைப் பூசி குழைத்து, சிறிதும் காற்று புகாமல் செய்து, மூடிவிடவேண்டும்.
மண் பானையின் பக்கவாட்டில் மாட்டுச்சாண வறட்டியை வைத்து தீ மூட்டிஎரித்து வர வேண்டும். இதன் மூலம் பானையில் உள்ள மூலிகைகள், வெளிப்புற சூட்டில் கரைந்து, தைலமாக, கீழே உள்ள பாத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக
இறங்கும். இதுவே, குழித்தைலம் ஆகும், இந்த முறையில் செய்யப்படும் தைலங்கள்,மிக அதிக வீர்யமும் சக்தியும்மிக்கவை.

ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெறுவது, அனைத்து வீரர்களின் கனவாகவும்இருக்கும், இப்படி பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர் ஒருவர், விழுதி வேரை நன்கு மென்று வாயில் அடக்கிக் கொண்டு ஓட, அவர்கள் தான் இறுதிக் கோட்டை முதலில்எட்டி, வெற்றிவாகை சூடுவார்கள், இதைப் போல, அதிமதுரம் வேர், கோபுரந்தாங்கி இலை, திருநீற்றுப் பச்சிலை இலையையும் சேர்த்து இடுப்பில் கட்டிக் கொண்டாலும்,வேகமாக ஓடுவது மட்டுமல்ல, அதிக சுமையையும் தூக்க முடியும் என்கிறது சித்த
வைத்திய நூல்கள்.

விழுதி இலைகளை நன்கு அலசி எடுத்துக் கொண்டு, அதனுடன் வாத நாராயணா மரத்தின் இலைகள் மற்றும் நெல்லி மரத்தின் பூக்கள் இவற்றை சேர்த்து,தண்ணீரில் இட்டு காய்ச்சி, நன்கு சுண்டியதும், ஆறவைத்து இரவில் பருகி வந்தால்,காலையில் மலம் இளகி, நன்கு பேதியாகும்.

பயனுள்ள‌ இதையும் கொஞ்சம் படியுங்கள்!

செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்கள்!

செம்பருத்திப் பூ
செம்பருத்திப் பூ

இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு’ நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல’ மருந்தாகவும் பயன்படுகின்றன.

வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி இந்த இதழில் அறிந்து கொள்வோம்.

செம்பருத்திப் பூவை சீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு பூ என வருணிக்கின்றன. ஆசியாவே இதன் பிறப்பிடம். மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்திதான். இந்தப் பூக்களின் நிறத்தையும், அடுக்கையும் வைத்து பலவகைகளாக பிரித்துள்ளனர்.

சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர்.

இதனை செம்பரத்தை, சப்பாத்து எனவும் அழைக்கின்றனர்.

செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.

வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்க

அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன.

இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

பெண்களுக்கு

கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து.

10 செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும்கொடுத்துவந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.

இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.

சிலருக்கு மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் அதிக வலி உண்டாகும். மேலும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படும். இவர்கள் செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும்.

சில பெண்கள் வெள்ளைப் படுதலால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த வெள்ளைப் படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

தலைமுடி நீண்டு வளர

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.

இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

நீர் சுருக்கு நீங்க

நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது.

அனைத்து வயதினரையும் பாதித்து வரும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், இதயநோய் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றிற்கு கோபமே காரணமாக உள்ளது. கோபத்தினால் உடலின் வெப்பம் அதிகப்பட்டு, ரத்த அழுத்தம் கூடி, நாளமில்லா சுரப்பிகளில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி, ஹார்மோன்களை சீர்குலைத்து பல நோய்களை உண்டாக்கிவிடுகின்றன. மேலும், அடிக்கடி கோபம் ஏற்படுவதால் உடல் எப்பொழுதும் சூடாக இருப்பது போன்ற ஒருவித உணர்ச்சி, முகத்தில் ஒருவித வெறி, மனம் அமைதியின்மை ஆகியன ஏற்பட்டு சமூகத்தில் இருந்து ஒதுங்க ஆரம்பிக்கின்றனர் அல்லது ஒதுக்கப்படுகின்றனர். உடலில் பித்தத்தின் அதிகரிப்பால் தோன்றும் இந்த கோபத்தை பித்தபிரமேகம் என்று மனம் சார்ந்த நோயாக சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது. உடல் மற்றும் மனதில் தோன்றும் ஒருவித உஷ்ணம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தி, உடலுக்கு குளிர்ச்சியையும், மனதிற்கு அமைதியையும் தரும் அற்புத மூலிகை செம்பருத்தி.

சிவப்புநிற பூக்களையுடைய பருத்திச் செடியே செம்பருத்தி என்று அழைக்கப்படுகிறது. காசிபியம் ஆர்போரியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் பூக்களே மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகின்றன. இதே குடும்பத்தைச் சார்ந்த செம்பரத்தை செடிகளை நாம் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகளாகும். செம்பரத்தை செடிகளும், செம்பருத்திச் செடிகளும் வேறு, வேறு செடிகளாகும். செம்பருத்தி செடிகளின் பூக்களிலுள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துடன், அதிக சூடு மற்றும் வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் வராமல் நம்மை காக்கின்றன.

செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்து, அம்மியில் வைத்து மைய அரைத்து, அரைநெல்லிக்காயளவு உருண்டையாக உருட்டி, பாலுடன் கலந்து காலை மற்றும் மாலை தொடர்ந்து 5 நாட்கள் உட்கொண்டு வர தேவையற்ற கோபம் மற்றும் பதட்டத்தினால் உண்டான உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியுண்டாகும்.
செம்பருத்திப் பூக்களின் பூவிதழ்கள் அரை கைப்பிடி, சீரகம்-1 கிராம், நெல்லிவற்றல்-1 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை அருந்தி வர அதிக உடல் உஷ்ணம் தணியும், செம்பருத்தி பூவிதழ்களை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சியோ அல்லது தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தோ தலையில் தேய்த்து வரலாம். இதனால் தலைசூடு தணியும்.

இத்தாவரங்களில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன.
இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை. இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவை.

மாதவிடாயைத் தூண்டக் கூடியது.இலைகளை அரைத்து குளிக்கும் பொது ஷாம்பூ மாதிரி உபயோகிக்கலாம் .உடலுக்கு குளிர்ச்சி .முடிக்கு நல்லது .இதழ்களின் வடிசாறு . சிறுநீர்ப் போக்கு வலியை நீக்கும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது.
கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.
காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைப் படுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.
400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை – மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும். இது ஒரு சிறந்த கூந்தல் தைலம்.

இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கிக் தின்பது குணப்படுத்தும்.
காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும்.
ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.
பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
இதிலிருந்து காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.

செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும்.
இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு?
வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் . செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.
நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது. தஙகச்சத்து இப்பூவில் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்ததாகும். தினமும் 10 பூவினை மென்று தின்று பால்அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும்.