ஜெயலலிதா வீடியோ குறித்து ஆனந்த்ராஜ் பரபரப்பு பேட்டி

219

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவில் சந்தேகம் இருக்கிறது எனவும், பெரும் சதி இருப்பதாகவும் நடிகர் ஆனந்த்ராஜ் பேட்டியளித்துள்ளார்.

ஆர்கே நகர் தேர்தலுக்கு முந்தைய நாள் டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டார்.

பலரும் வீடியோ போலியானது என கூறிவரும் நிலையில், பிரபல வில்லன் நடிகர் ஆனந்த்ராஜீம் அதே கருத்தையே வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், வெற்றிவேல் வெளியிட்ட ஜெ. சிகிச்சை வீடியோவில் சந்தேகம் இருக்கிறது. வீடியோவில், திகதி, நேரம் குறிப்பிடப்படவில்லை, இது பெரிய சந்தேகத்தை உருவாக்குகிறது.

வீடியோவில் இடம்பெறும் மரம் போயஸ் இல்லத்தில் உள்ளது, வீடியோவை இவ்வளவு நாள் வைத்திருந்தாலே அதில் சதி உள்ளது என்றுதானே அர்த்தம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் விசாரணை ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும், சசிகலாவிடம் விளக்கம் கேட்டதற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.