பிறந்த நாளன்றே தீயில் கருகிய குஷ்பு: மனதை உருக்கும் சம்பவம்

254

மும்பையில் இன்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பிறந்தநாளன்றே தீயில் கருகி இளம்பெண் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் நடந்த தீ விபத்தில் இதுவரையிலும் 15 பேர் பலியாகியுள்ளனர்.

இவர்களில் பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய குஷ்பு பன்சாலி என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

நண்பர்கள் புடைசூழ 28வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் குஷ்பு பன்சாலி, 12 மணியை கடந்ததும் தன்னுடைய அம்மாவுக்கு போன்ற செய்த குஷ்பு ஆசி பெற்றார்.

சில நிமிடங்களில் தீப்பிடிக்க ஆரம்பித்தது, என்னசெய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் மக்கள் அலைமோதினர்.

சில பெண்களுடன் குஷ்பு பன்சாலியும் கழிவறையில் அமர்ந்து கொண்டார், அங்கேயே பரிதாபமாய் உடல் கருகி பலியானார்.

இவரது சகோதரர் மற்றும் கணவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர், பிறந்தநாளிலேயே இளம்பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.