2017 ஆம் ஆண்டில் அதிகளவில் கழுவி ஊற்றப்பட்ட பெண்களில் முதலிடம் யாருக்கு தெரியுமா..?

420

2017 ஆம் ஆண்டில் அதிக அளவில் நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட ஐந்து பெண்கள் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம் வாங்க.

1.பிக் பாஸ் ஜூலி :

ஒவ்வொரு வருடமும் யாராவது ஒருவர் நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வது வழக்கமாகமான ஒன்று தான். இந்த வருடம், அனைவரிடத்திலும் திட்டு வாங்கியவர் தான் பிக்பாஸ் ஜூலி.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட போது இவர் சமூக வலைத்தளத்தில் பிரபலமானார். அப்போது இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

ஆனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அனைத்தும் தலை கீழ் ஆனது. ஜூலியை விமர்சிக்காதவர்கள் யாருமே இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு அனைவரிடத்திலும் வாங்கி கட்டிக்கொண்டார்.

மற்றொரு பக்கம் ஓவியா ரசிகர்கள் பலர் ஜூலியை தொடர்ந்து கழுவி ஊற்றி வருகின்றனர்.

2.நடிகை காயத்ரி:

இதில் இரண்டம் இடத்தை பிடித்துள்ளது நடிகை காயத்ரி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது நடிகை காயத்ரியும் ஜூலி அளவிற்கு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டார்.

3.தமிழிசை :

இந்த பட்டியலில் மூன்றாவது  இடத்தில் இருப்பவர் தமிழிசை.
எப்போதும் நெட்டிசன்களுக்கு பிடித்தவர் இவர் மட்டும்தான். இவரை பற்றி மீம்ஸ் வராத நாளே இல்லை என்று சொல்லலாம்.

4.சசிகலா:

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலா நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறைக்கு செல்லும் வரையில் அவரை பற்றிய மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் அதிகமாக வளம் வந்தன.

5.லக்ஷ்மி பிரியா :

லட்சுமி என்கின்ற ஒரே ஒரு குறும்படத்தின் மூலம் பெரும்பாலான நெட்டிசன்களின் வெறுப்பையும் இவர் சம்பாதித்துள்ளார்.

பெண்ணுரிமை பற்றி பேசும் இந்த படத்தை பற்றி சமூக வலைதளத்தில் கழுவி கழுவி இளைஞர்கள் ஊத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.