அப்போது எனக்கு 18 வயது இருக்கும்: பன்னீர் செல்வத்திள் பளீர் பேச்சு

236

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், டிடிவி தினகரனுக்கு அதிகமுவின் வரலாறு தெரியவில்லை என பேசியுள்ளார்.

ஊட்டியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய பன்னீர்செல்வம், அப்போது எனக்கு 19 வயது. தினகரன் அப்போதுதான் எல்.கே.ஜி படித்துக்கொண்டிருந்தார். என்னுடைய பணிகளைப் பார்த்துதான் அம்மா என்னை அழைத்துப் பேசினார்.

ஆனால், தினகரனோ அம்மாவிடம் அவர்தான் என்னை அறிமுகப்படுத்தியதாகத் தினகரன் கூறிவருகிறார். எத்தனை பேர் கழகத்துக்காக உயிர்தியாகம் செய்துள்ளார்கள் என்பது அவருக்குத் தெரியாது.

துரோகம் செய்ததற்காக அவர்களின் குடும்பத்தையே கூண்டோடு அம்மா விரட்டியடித்தார். நாங்கள் அசந்த நேரம் பார்த்து தினகரன் ஆர்கே நகரில் வெற்றி பெற்றுள்ளார்.

இனி நாங்கள் ஒருபோதும் அசரமாட்டோம் என கூறியுள்ளார்.