ஓர் ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் அறை

276

சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் அறை தற்போது திறக்கப்பட்டு சோதனை நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவர் குடியிருந்த வேதா நிலையத்தில் உள்ள அவரின் அறை திறக்கப்படாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன், வட்டாச்சியர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர்.

மேலும் ஓர் ஆண்டாக பூட்டி இருந்த ஜெயலலிதாவின் அறை ஆட்சியர் அன்புசெல்வன் முன்னிலையில் திறக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.