கலா மாஸ்டர் எப்படி மெலிந்தார் தெரியுமா……?

314

பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது தனது உடல் எடை குறைப்பு பற்றி தெரிவித்துள்ளார்.

உடல் எடையைக் கணிசமாகக் குறைச்சுட்டீங்கபோல…”

“ஆமாம். 12 வயசிலிருந்து சினிமாவில் ஓய்வில்லாம இரவு பகலா உழைச்சேன். காலை டிபனை மதியமும், மதியச் சாப்பாட்டை சாயங்காலமும், டின்னரை நைட்டு 12 மணிக்கும்தான் சாப்பிடுவேன்.

20 வயசுல ரொம்ப ஒல்லியா இருந்தேன். எல்லா ஸ்டார்ஸும் ‘ஒல்லிக்குச்சி கலா’னுதான் என்னைக் கூப்பிடுவாங்க. சாப்பாட்டு விஷயத்தில் கவனக்குறைவா இருந்ததன் விளைவாக, தைராய்டு மற்றும் உடல் எடை பருமன் பிரச்சினை ஏற்பட்டுச்சு.

முதுகுவலி, மூட்டுவலி அதிகமாச்சு. வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தமுடியாமல் சிரமப்பட்டேன். அதனால், டயட் இருக்க ஆரம்பிச்சேன்.

மூணு முறை சரியா கடைப்பிடிக்க முடியலை. கடந்த ஏப்ரல் மாசம் 78 கிலோ எடை இருந்தேன். முதல் நாலு வாரத்துக்கு எந்தத் திட உணவும் சாப்பிடலை. தண்ணி சாப்பாடு மட்டும்தான்.
யோகா, நடைப்பயிற்சி, ஹெவி உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சேன். இப்போ 59 கிலோ இருக்கேன். உடல் ரொம்ப புத்துணர்ச்சியோடு இருக்கு.

இன்னும் எடை குறைக்கணும்.”