சனீஸ்வரர் கோவிலிருந்து இவற்றை கொண்டுவந்தால் உங்களுக்கு ஆபத்து!

299

சனீஸ்வரர் கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லாமல் கோவிலில் விட்டு விட்டு வந்துவிட வேண்டும் என்ற கருத்து பக்தர்கள் மத்தியில் நிலவுகிறது.

பொதுவாக சனீஸ்வரர் கோவிலில் வழங்கப்படும் தேங்காய், பழம், விபூதி பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லாமல் கோவிலில் விட்டு விட்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் நிலவுகின்றது.

சில பிரசாதங்களை மட்டும்தான் கோயிலில் விடலாம். சில வற்றை கொண்டு வரலாம்.

கோவிலில் வழங்கப்படும் விபூதி, குங்குமம், தீர்த்தம், தேங்காய், பழம், லட்டு, முருக்கு, வடை, பஞ்சாமிர்தம், புஷ்பம் போன்ற பிரசாதங்களை பக்தர்கள் தாராளமாக வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.

ஆனால், எள் சாதத்தை காகத்துக்கு படைக்க வேண்டும். இதைமட்டும் எடுத்து வரக் கூடாது. எனினும், பெரிதாக இது குறித்து அச்சம் கொள்ள தேவை இல்லை.