தமிழனா இல்லை உலக அறிவின் தலைவனா..? தற்போதுள்ள மனிதர்களை விட நூறு மடங்கு நுண்ணறிவு.. தொல்லியலை புரட்டி போடும் ஆய்வின் முடிவு..!!

362

ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களை எழுதப் பழக்குவார்கள். சதுரக் கட்டங்களாகப் போட்ட நோட்டில் ஆசிரியர் ஒவ்வொரு எழுத்தாக எழுதச் சொல்வார்.

ஒரு வார்த்தையைக் குறைந்தது பத்து தடவையாவது எழுதச் சொல்வார்கள். பத்து தடவை எழுதும் போது, எழுதிப் பழகும் அந்தச் சிறுவர்களுக்கு எழுத்துப் பிழை வராது.

வார்த்தையும் மனதில் பதிந்து விடும். இதற்கும் ஒரு படி மேலே போய், அந்த எழுத்துக்கள் சீராக எழுதப்பட கொடுக்கப்படும் சிறந்த பயிற்சி இது.

இது தற்போதுள்ள நடைமுறை. அக்காலத்தில், படிக்காதவர்கள் தான் அதிகம் இருந்தார்கள். படித்தவர்கள் மிகக் குறைவு.

ஆனால், அவர்களின் நுண்ணறிவு, நுட்பம் எல்லாம், தற்போதுள்ள மனிதர்களை விட நூறு மடங்கு அதிகம் இருந்தது.

பல பழமையான கோயில்களில் கோயிலின் சுற்றுப்புறச் சுவர்களில் கல்வெட்டுக்கள் பொறித்திருப்பதை இன்றும் நாம காணலாம் அவை எல்லாம், ஒரே நேர் கோட்டில், சீராக எழுதப்பட்டிருக்கும்.

ஆனால், நேர் கோடுகள் எதுவும் தட்டுப்படாது. இது தான், கல்வெட்டு எழுதுபவர்கள் பெற்ற பயிற்சி.

இந்தக் கல்வெட்டுக்களை எழுதும் பயிற்சியைச் சொல்லிக் கொடுப்பதற்கென்ற முறையையும், கோயிலில் கல்வெட்டாகப் பொறித்து வைத்துள்ளார்கள்.

இந்த அபூர்வமான கல்வெட்டு, புதுக்கோட்டையின் வட மேற்கு கோடியில் உள்ள நொடியூர் என்ற கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலின் கருவறையின், பின்புறச்சுவரில் செங்கோட்டு வரிகளாகக் காணக் கிடைக்கிறது.

கல்வெட்டுகள் ஒரே வரி வடிவில் எப்படிப் பொறிக்கப் படுகிறது என்பது பற்றி, எடுத்துரைக்க, இது வரை எந்தக் கல்வெட்டும், பழங்கால ஆவணமோ இல்லை. எனவே, இது முக்கியச் சான்றாகவும், சிறந்த ஆவணமாகவும் உள்ளது.

தற்போது பேனர்களில், மற்றும் சுவர்களில் வண்ண வடிவில் எழுதுகிறார்கள்.  இதெற்கெல்லாம் முன்னோடியாக அமைந்திருக்கிறது இந்தக் கல்வெட்டு. இதனை எழுதுவதற்கு முன்பாக, தேர்ந்தெடுக்கப்படும் கோயில் சுவற்றில் என்ன எழுத வேண்டும், எத்தனை வார்ததைகள் எழுத வேண்டும், அதை எப்படி எழுத வேண்டும், என்ற முறையை வரும் சந்ததியினர் தெரிந்து கொள்ளட்டும், என்ற பரந்த மனப்பான்மையில், அந்த நுணுக்கத்தை கோயில்களில் கல்வெட்டு எழுதும் ஒரு சிற்பி, விளக்க அமைப்புடன் தெளிவு படுத்தியிருக்கிறார்.

“பெரஸ் ஆக்ஸைடு” என்று தற்போது வேதியலாகச் சொல்லப் படும் காவியைக் கொண்டு, மயிரிழையில் 5 செ.மீ. அளவில், நேர் கோடுகளையும், அதே சம அளவிலான குறுக்கு கோடுகளையும் போட்டு, அதற்குள் அந்தக் கோடுகளைத் தொட்டு விடாதபடி, ஆனால் அதே சமயம், அந்தக் கட்டத்திற்குள் சரியாக அடங்குமாறு வட்டெழுத்துக்களை எழுதி வைத்திருக்கிறார்கள். ஏனெனில் அந்தக் காலத்தில், கல்வெட்டுக்களை  எழுதுவதற்கென்றே ஆட்கள் இருந்தார்கள்.

 

இவர்களிடம் தான், இன்ன செய்தியை இந்தக் கல்லில் குறிப்பிட்ட அளவில், வெட்டி விட வேண்டும், என்று சொல்லப் பட்டிருக்கும். அதனை வைத்துத் தான் அவர் கல்வெட்டுக்களை பொறிப்பார். அதற்கு முறையான பயிற்சி வேண்டும்.

ஏனென்றால், ஏதேனும் எழுத்துப் பிழை வந்து விட்டால், கல்லில் ஒன்றுமே செய்ய இயலாது.

முழுதும் பாழாகி விடும். மேலும், நீங்கள் கவனித்திருப்பீர்கள். அந்தக் காலக் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாம் ஒரே நீண்ட வரிகளைக் கொண்ட வாசகங்களாகத் தான் இருக்கும்.

 

ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்ததைக்கும் இடைவெளி ஏதும் இருக்காது. ஆனால், இலக்கண முறையில் சிறிதும் பிசகாமல் பொறிக்கப் பட்டிருக்கும்.

அதனைப் படியெடுத்து வாசிக்கும் போது, அதன் பொருளை அறிய தற்போது அதிக கால அவகாசம் தேவைப் படுகிறது. அந்தக் காலத்தில், அவர்கள் எழுதிய, கல்வெட்டுக்கள் எல்லாம் அந்தக் கால மனிதர்களுக்கு, எளிதாக இருக்கும்.

அவர்கள் படித்த விதம் அப்படி. இப்போது அப்படி இல்லையே, ஆனால், அந்த எழுத்துக்களில் புதைந்துள்ள இலக்கண முறையை ஆய்ந்து பார்த்தால், நாம் படிக்கும் முறையில் நாம் இன்னும் அதிகமாகக் கற்றுக் கொள்ள வேண்டும், என்பதை  உணர முடியும்.