மனைவி கள்ளகாதலனுடன் இருப்பதை நேரில் பார்த்த கணவன் செய்த அதிர்ச்சி செயல்.!!

1006

பீகார் மாநிலம் சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கும் மதுகுமாரி என்ற பெண்ணுக்கும் 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. வேலை விஷயமாக ராகேஷ் வெளியூருக்கு அடிக்கடி சென்று விடுவார்.

அப்போது., அவரின் மனைவிக்கும் அதே ஊரில் உள்ள ஒரு இளைஞருக்கும்  கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் ராகேஷ்க்கு தெரிய வந்துள்ளது. ஆனால்., தன்னுடைய மனைவியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியூரில் இருந்து ராகேஷ் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி அந்த இளைஞருடன் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பிறகு ராகேஷ் இந்த விசயத்தை ஊர் பஞ்சாயத்துக்கு எடுத்து சென்றுள்ளார்.

அப்போது ராகேஷின் மனைவி மதுகுமாரி காதலனுடன் வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதனால்.., தனது மனதை கல்லாக்கி கொண்ட ராகேஷ் தனது மனைவியை அந்த இளைஞருடன் சேர்த்து வைக்க முடிவு செய்தார்.

அதன் படி ராகேஷ் தனது மனைவிக்கும் அவர் விரும்பிய அந்த இளைஞருக்கும் கோவிலில் திருமணம் செய்துவைத்துள்ளார்.

மேலும் அவர்களை வாழ்த்திய ராகேஷ் தனது இரண்டு குழந்தைகளையும் தன்னோடு கூட்டி சென்றார்.

கணவனே.., தனது மனைவியை அவரது காதலனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.