இடுப்புக்கு கீழே செயலிழந்த நிலையில் இணைந்த இரு இதயங்கள்

426

இந்த தம்பதியினரின் திருமணம் மருத்துவமனையில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இடுப்பு கீழே செயலிழந்த நிலையில், இரு மனங்கள் சங்கமித்துள்ளன.

திருவந்தபுரத்தை சேர்ந்த ஜார்ஜ் பெங்களூரை சேர்ந்த ஜாஸ்மின் ஆகிய இருவரும் தற்போது காதல் தம்பதியினர்.

விபத்தில் சிக்கி இருவரும் தங்கள் கனவுகளை தொலைத்துவிட்ட நிலையில், தற்போது ஒருவருக்கொருவர் ஆறுதலாக வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு, பிகாம் முடித்திருந்த ஜார்ஜ், அடுத்ததாக எம்காம் படிக்க வேண்டும் என கனவில் இருந்தபோது அந்த விபத்து நடந்தது, காலையில் பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் இவரது, முதுகெலும்பில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, உணர்வு நரம்புகள் செயலிழந்திருக்கின்றன. அதனால் என் இடுப்புக்கு கீழ் பகுதி இனி செயல்படாது. கழிவறைக்கு கூட நான் அடுத்தவர்கள் துணையின்றி செல்ல முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

2004 ஆம் ஆண்டு ஜாஸ்மின் தனது தங்கையோடு ஸ்கூட்டரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில், தலையில் அடிபட்டு கீழே விழுந்திருக்கிறார். அதோடு என் இடுப்புக்கு கீழ் செயல்பாடு இல்லாமல் போய்விட்டது. வீல் சேரிலே வாழ்க்கை கடந்துள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவமனை ஒன்று ‘முதுகெலும்புக்குள் செலுத்தப்படும் விசேஷ ஊசி மருந்து உள்ளது. அது முதுகெலும்பில் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்து, முன்பு போல் இயங்கவைக்கும்’ என்று விளம்பரம் கொடுத்திருக்கிறது.

அதை பார்த்துவிட்டு பெங்களூருவில் இருந்து ஜாஸ்மினும், திருவனந்தபுரத்தில் இருந்து ஜார்ஜூம் அந்த மருத்துவ மனைக்கு வந்திருக்கிறார்கள்.

முதல் நாள் ஜாஸ்மினை, ஜார்ஜ் பார்த்திருக்கிறார். மறுநாளும் அவர் கண்கள் ஜாஸ்மினைத் தேடியிருக்கின்றன. 12 நாட்கள் தொடர்ச்சியாக ஊசி மருந்து செலுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் ஊசி போடும்போது உயிர்போகும் வலியை அனுபவித்திருக்கிறார்கள். கடைசி நாளில் இருவரும் அருகருகே உள்ள படுக்கையில் வலியை தாங்கிக்கொண்டிருந்த நேரத்தில் முதல் முறையாக அவர்கள் மனந்திறந்து பேசியிருக்கிறார்கள்.

அப்போது, இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப்போய்விட்டது, ஆனால் போட்டுக்கொண்ட ஊசியினார் இவர்கள் கனவு நிறைவேறவில்லை, கவலையுடன் வீடு திரும்பிய இவர், நாளடைவில் இணைய வழியாக இருவரும் நட்புடன் பேச ஆரம்பித்து காதலர்களாக மாறினர்.

இவர்களது திருமணத்திற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, இரு மனங்களும் இணைந்துள்ளனர்.

நமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, நமது உடலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர கற்றுக்கொண்டால், பழைய வாழ்க்கைக்கு நம்மால் திரும்ப முடியும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

இப்போது எங்கள் வேலையை எங்களால் கவனித்துக்கொள்ள முடிகிறது. வீட்டில் மாடிப்படிகளை மாற்றிவிட்டு வீல் சேர் செல்லும் அளவுக்கு சவுகரியப்படுத்தியுள்ளோம். வண்டி ஓட்டுவதை போன்று வீல் சேரை இயக்கி டவுன் வரை சென்று வருகிறோம்.

வாரத்திற்கு ஒருமுறையாவது வெளியில் சென்று வரும் இவர்கள், தங்கள் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக நடத்தி வருகிறார்கள். வீல் சேர் வாழ்க்கை என்பது முடிவானதல்ல’ என்பதை உணர்த்தும் விதத்தில், வீல் சேரில் வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.