ஒரு இட்லிக்கு கதறியபடி பசியால் இறந்த லூஸ் மோகன். திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கிய சோகம்

855

திரையுலகில் தூங்கும்போது கூட காலை ஆட்டியபடி தூங்க வேண்டும் இல்லையேல் இறந்து விட்டதாக எண்ணி புதைத்து விடுவார்கள்.

இது கலைவாணர் என்.எஸ்.கே. அடிக்கடி கூறும் வார்த்தை. இன்றளவும் பொருந்தும் தீர்க்கதரிசன வார்த்தை. நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் இடையில் கொஞ்ச நாள் இடைவெளி விட்டால் கூட நம்மை மறந்துவிடுவார்கள்.

எத்தனையோ நல்ல நடிகர்கள் வயதான காலத்தில் பசியும் பட்டினியுமாக அவதியுற்று அனாதையாய் இறந்த கதைகள் நிறைய உண்டு.

நம்மை திரையில் குலுங்க குலுங்க சிரிக்க வைத்த லூஸ் மோகன் தனது இறுதிக் காலத்தில் தனது மகனிடம் ஒரு நாளைக்கு இரண்டே இரண்டு இட்லி கொடு மகனே பசி தாங்கவில்லை என்று கதறினார்.

மகன் கொடுக்க வில்லை . லூஸ் மோகன் கதறியபடி போலீஸ் கமிசனர் ஆபீஸ் சென்று தனது மகன் பட்டினி போட்டு கொல்கிறான் என்று புகார் அளித்து மீடியாக்கள் முன்பும் கண்ணீர் விட்டு அழுதார்.

இதை டிவி செய்தியில் பார்த்த தமிழக மக்கள் அழுதார்கள். அதன் பின் ஒரு வருடத்திற்குள் லூஸ் மோகன் இறந்து போனார்.

லூஸ் மோகன் கதை நமக்கு வெளியே தெரிந்த கதை. வெளியில் தெரியாமல் பசியிலும் பட்டினியிலும் துடிக்கும் மூத்த கலைஞர் நிறையவே உண்டு.இவர்களின் துயர் துடைக்க நடிகர் விஷால் எடுத்த முடிவு தான் மனிதாபிமானத்தின் உச்சம். விஷால் பற்றி வெளியே தெரியாத ஒரு விஷயம் உண்டு.

அது பசித்தோர்க்கும், ஏழை எளிய மக்களுக்கும் பிறர் அறியாமல் உதவும் குணம். கஷ்டம் என்போர்க்கு நிறையவே உதவிகள் செய்பவர்.அவர் திரையுலகில் ஆதரவற்று வாடும் மூத்த கலைஞர்களுக்கு சகல வசதிகளோடும் முதியோர் இல்லம் துவங்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

இதை மட்டும் விஷால் செய்து முடித்தால் விஷாலை தமிழ் திரையுலகம் இறுதி வரை மறக்காது.