கணவனை பிரிந்து பாலியல் தொழில் செய்த மனைவிக்கு ஏற்பட்ட சோகம்

986

பெண்ணை கொலை செய்து, கிணற்றில் வீசிய மூன்று ஆட்டோ ஓட்டுனர்களை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் ஓராண்டுக்கு பின் கிணற்றில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கரூரை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி பர்வீன் பானு (28) தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2015-ல் வீட்டை விட்டு வெளியேறிய பர்வீன் மாயமாகி உள்ளார்.

இது தொடர்பாக இளையராஜா பொலிசில் புகார் அளித்திருந்த நிலையில் பொலிசார் பர்வீன் தொலைபேசி அழைப்புகளை கொண்டு விசாரித்து வந்தனர்.

சென்னை பொலிசார் உதவியுடன் கரூர் பொலிசார் பெருங்களத்துாரில் உள்ள மாணிக்கம், ராஜா ஆகியோரிடம் விசாரித்தனர்.

அதில், இருவரும் சேர்ந்து, பர்வீனை கொலை செய்து, முடிச்சூரில் உள்ள விவசாய கிணற்றில் சடலத்தை கல்லில் கட்டி தள்ளியதாக ஒப்பு கொண்டனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், வீட்டில் இருந்து வெளியேறிய பர்வீனுக்கு, ராஜாவுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அவர் பெருங்களத்துாரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் மாணிக்கத்துடன் பர்வீனுக்கு பழக்கம் ஏற்பட்ட போது மாணிக்கம் தனி வீடு எடுத்து கொடுத்துள்ளார்.

அதன்பின், மறைமலை நகரில் வேறோருவருடன் பழக்கம் ஏற்பட்டு பர்வீன் வீட்டை விட்டு சென்று உள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் ராஜா மற்றும் மாணிக்கத்துடன் பர்வீன் தகராறு செய்த நிலையில் ஆத்திரத்தில் இருவரும் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து நண்பர் கிஷோர் உதவியுடன் சடலத்தை கிணற்றில் வீசியுள்ளனர்.

தற்போது கிணற்றில் உள்ள நீரை மோட்டார்கள் கொண்டு இறைத்து பர்வீன் சடலத்தை மீட்டுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.