சின்னத்தம்பி சீரியல் நடிகையின் கணவர் தற்கொலை.. அதன் பிறகு அவர் செய்த காரியம்

708

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்தம்பி சீரியலில் கதையின் நாயகியாக வருபவர் பவானி ரெட்டி. சீரியலில் சந்தோஷமாக, சுட்டி பெண்ணாக நடிக்கும் இவரின் வாழ்க்கையில் இந்த ஆண்டு பெரிய சோகம் நடந்துள்ளது.

இவர் தன்னுடன் சீரியலில் நடிக்கும் பிரதீப் குமார் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் பிரதீப் கடந்த மே 3ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இதனை குறித்து பவானி ஒரு பேட்டியில் கூறும்போது, கணவன் மனைவிக்குள் நடக்கும் சின்ன பிரச்னைக்காக பிரதீப் இப்படி செய்து கொண்டார். இது தனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றும் கூறி இருக்கிறார். மேலும் அவர் கையில் பிரதீப் என்று பச்சை குத்தியுள்ளது கூறிப்பிடத்தக்கது.