தாயார் இறந்த அதிர்ச்சி செய்தியால் மகனுக்கு நேர்ந்த துயரம்

228

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் தாயார் இறந்த அதிர்ச்சி செய்தியை கேட்டு துபாயில் வசித்துவந்த மகன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் அனில் குமார் கோபிநாதன். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உம் அல்-குவைன் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார்.

அவரது தாயார் கவுசல்யா கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊரான பாரிபள்ளி கிராமத்தில் வசித்துவந்தார்.

இந்நிலையில், கோபிநாத்தின் தாயார் கடந்த 20-ம் திகதி மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்டு கோபிநாதன் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.

இதையடுத்து துபாயில் இருந்த அவரது சகோதரர் சந்தோஷ் உடனடியாக இந்தியா விரைந்துள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களால் கோபிநாதனால் உடனடியாக கிளம்ப முடியவில்லை. இதையடுத்து அடுத்த நாள் அவர் செல்வதாக இருந்தது.

இதனால் கடும் மன உழைச்சலுக்கு ஆளான அவர் தான் தங்கி இருக்கும் அறைக்கு சென்றுள்ளார். அடுத்த நாள் அவரது நண்பர்கள் சென்று பார்த்தபொழுது கோபிநாதன் சுய நினைவை இழந்த நிலையில் கிடந்துள்ளார்.

உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் மாரடைப்பினால் கோபிநாதன் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

தாய் இறந்த செய்தி கேட்டு மகன் மரணமடைந்த சம்பவம் பாரிபள்ளி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் மரணமடைந்த கோபிநாதனின் உடல் இன்றிரவு இந்தியா கெண்டுவரப்பட்டு, நாளை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக கூறப்படுகிறது.