தினமும் ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்..? அப்படின்னா.. இதை தவறாம பண்ணிடுங்க

1209

தொழில்நுட்பம் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஆபாச படங்கள் பார்ப்பது எளிதாகிவிட்டது.

கையில் வைத்திருக்கும் ஆண்ட்ராய்டு போன்., லேப் டாப், கம்ப்யூட்டர் மூலம் ஆபாசப்படங்கள் பார்ப்பது தற்போது அதிகரித்துவிட்டது.

மற்றோரு பக்கம் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நமது தகவல்களை திருடும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது.

இது போன்ற வேலைகளை ஆபாச இணையதளங்கள் மூலம் சிலர் செய்து வருகின்றனர்.

ஆபாச படம் பார்ப்பதற்கும்., நமது கம்ப்யூட்டர்/செல்போன்-ல் உள்ள தகவல்கள் திருடப்படுவதற்கும் என்ன சம்மந்தம் என்கின்ற கேள்வி எழுகிறதா..?

ஆம்.., நமது ஃபேஸ் புக்கை லாக் அவுட் செய்யாமல் செக்ஸ் இணையத்தளங்களை பார்த்துக்கொண்டிருக்கும் போது., ஹேக்கர்கள் ஊடுருவி நமது தகவல்களை திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

மொபைல் வாலட்டுகள்., வாங்கி கணக்கு ரகசியங்கள் போன்றவற்றையும் ஹேக்கர்கள் செக்ஸ் வலைத்தளங்கள் மூலம் ஊடுருவி திருடுகின்றனர்.

அதுமட்டும் இல்லை. உங்களது அந்தரங்க ரகசியங்களை சேமித்து வைத்திருந்தால் அவற்றையும் ஹேக் செய்வதற்கு வாய்ப்புள்ளது.

நீங்கள் தினமும் செக்ஸ் இணையதளங்களை பார்க்கும் நபராக இருக்கும் பட்சத்தில்., ஃபேஸ் புக்., பேங்க் வெப் சைட், மொபைல் வாலட் போன்றவற்றை  லாக் அவுட் செய்து விட்டு பார்ப்பது நல்லது.

பிரவுசிங் ஹிஸ்டரியை டெலிட் (browsing history delete ) செய்தாலும் கூட ஹேக்கர்களின் ஊடுருவலை தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் எச்சரிக்கையாக இருங்கள்.!