திருமணம் நடந்த அன்றே உயிரிழந்த மணப்பெண்..!! என்ன காரணம் தெரியுமா..?

555

அமெரிக்கா நாட்டில் வசித்து வருபர் டேவிட். இவர் ஹீதர் என்கின்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இந்த நிலையில் ஹீதருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஹீதருக்கு மார்பக புற்று நோய் உள்ளதாக கூறினர்.

அதனுடன் அந்த பெண் சில மாதங்கள்தான் உயிர் வாழ்வர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதை கேட்ட டேவிட் அதிர்ச்சி அடைந்தார்.  ஆனாலும் தனது காதலில் இருந்து அவர் பின் வாங்கவில்லை.

ஹீதர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த மாதம் புற்றுநோய் அவரின் மூளை மற்றும் நுரையீரலுக்கு பரவியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதனுடன் ஹீதர் தனது கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்த ஹிதரை டேவிட் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கண் கலங்கினார்கள்.

திருமணம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் ஹீதர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரின் காதலர் மற்றும் நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உண்மையான காதலுக்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.