நடிகையின் கன்னித்தன்மையை சோதிக்க கூறிய நடிகர் கைது

406

Harassment of Sandalwood actress from 'Ice Mahal' film Hero.(Ice Galate) Part-02 க்கான பட முடிவு

படத்தில் நடித்த நடிகை குறித்து சக நடிகர் ஆபாசமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ் மஹால் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தில் நடித்த ராஜசேகர் என்ற நடிகர், படத்தில் நடிக்கும் நடிகைக்கும், இயக்குனருக்கும் தொடர்பு இருக்கிறது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொள்கின்றனர். எனவே நடிகை மீது சந்தேகம் உள்ளது. அவர் கன்னித் தன்மையுடன் இருக்கிறாரா என்று பரிசோதனை செய்யுங்கள் என தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த நடிகை, என்னிடம் இவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் நடிகரோ, இயக்குனருடன் சேர்ந்து சுற்றியது தெரியும். நான் கூறியது பொய் என்றால், எனது முன்னே நீ, மருத்துவமனையில் கன்னித்தன்மையை பரிசோதித்துக் கொள்ளவேண்டுமென்று பேசியுள்ளார்.

இதையடுத்து ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று பெங்களூரு மாகடி பொலிஸ் நிலையத்தில், நடிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குபதிந்தனர்.

எனினும் உடனடியாக ஜாமீனில் ராஜசேகர் விடுவிக்கப்பட்டார்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.