நான்கு நாட்களாக அல்லாடும் மாற்று திறனாளி ரஜினி ரசிகர்.!!

249

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 26 ஆம் தேதியில் இருந்து மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

ரஜினியின் சந்திப்பு சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

அடையாள அட்டை உள்ள ரசிகர்கள் மட்டுமே இந்த உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில்., அடையாள அட்டை இல்லாததால் மாற்று திறனாளி ரசிகர் ஒருவர் ரஜினியை பார்க்க முடியாமல் மண்டபத்தை 4 நாட்களாக சுற்றி வருகிறார்.

இதில் வருத்தமளிக்கும் செய்தி என்னவென்றால்., ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகள் ஒருத்தர் கூட இவரை கண்டுகொள்ளவில்லை.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அந்த ரசிகர்., ரஜினியுடன் ஒரே  ஒரு போட்டோ மட்டும் எடுத்தால் போதும் என்று கண்ணீருடன் கூறுகிறார்.

ரசிகர்களை சந்திப்பதற்கே., இந்தளவிற்கு கட்டுப்பாடு போட்டுள்ள ரஜினி அரசியலுக்கு வந்து மக்களுக்கு எப்படி நல்லது செய்வார்…? என்கின்ற கேள்வி நமக்கு எழாமல் இல்லை.