மகளை 20 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து 8 குழந்தைகளுக்கு தாயாக்கிய தந்தை

636

மகளை 20 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் அடிமையாக வைத்து அவருக்கு எட்டு குழந்தைகள் கொடுத்துள்ள தந்தைக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினாவின் சாண்டியாகோ டெல் மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

டோமிங்கோ புலாசியோ (57) என்ற நபர் தனது மகளை 20 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் மகளுக்கு எட்டு குழந்தைகள் பிறந்துள்ளது. டோமிங்கோவின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்னரே இறந்திருக்கலாம் அல்லது கணவரை பிரிந்து சென்றிருக்கலாம் என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மகளுக்கு 11 வயதாக இருக்கும் போது முதன் முதலில் டோமிங்கோ அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்,

இந்நிலையில் கடந்த ஆண்டு தனது குழந்தைகளில் ஒருவரை டோமிங்கோவின் மகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அப்போது குழந்தையின் தந்தை குறித்து மருத்துவர்கள் கேள்வியெழுப்பிய போது தான் இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் டோமிங்கோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

தற்போது விசாரணை முடிவில் டோமிங்கோவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.