முதலிரவன்று படுக்கையில் ஏன் பூ தூவப்படுகிறது? அதன் பரம ரகசியம் தெரியுமா?

784

மனிதனின் ஆரோக்கியக் கூறுகளில் சுகமான நித்திரை மட்டுமல்ல அந்த நித்திரையைச் செய்வதற்கான படுக்கையும் அத்தியாவசியமானது.

நாம் என்ன மாதிரியான படுக்கைகளைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில்தான் எமது சுகமான உறக்கமும் ஆரோக்கிய நிலைமைகளும் தங்கியிருக்கின்றன.

முற்காலத்தில் கட்டாந்தரையில் ஓலைப் பாயும் விலங்குத் தோலும் விரித்துப் உறங்கிய மனிதனை நிம்மதியான உறக்கமும் சோர்வற்ற உடல் ஆரோக்கியமும் தழுவியிருந்தன. ஆனால் இன்றைய காலத்தில் இரசாயணத்தால் உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் படுக்கைகள் மனித உடலில் பல்வேறு மாறுபாடுகளை உண்டாக்கியிருக்கிறது.

இந்த நிலையில், படுக்கையில் பூ தூவி உறங்குவது ஒரு வழக்கமாக இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக முதலிரவு அன்று மணவாளனும் மணவாட்டியும் துயிலும் பஞ்சணையில் பல்வேறு வாசனை மிக்க மலர்களைத் தூவுவது பழங்காலம்தொட்டே காணப்படும் ஒரு வழக்கமாகும்.

சரி ஏன் முதலிரவு படுக்கை மெத்தையில் மலர்கள் தூவப்படுகின்றன?

உண்மையில் இது ஓர் வெற்று அலங்காரத்துக்காகத் தூவப்படுவதில்லை. இதில் உடலியல் மற்றும் உளவியல் காரணிகளும் அடங்கியிருக்கின்றன. முன்னைய காலங்களில் மன்னர்களின் படுக்கையறை இப்படியான மலர்களாலேயே உருவாக்கப்பட்டிருந்தன.

படுக்கையில் மலர்களைத் தூவுவதென்பது மணமக்களின் மனத்திலே உள்ள கிலேசங்களைப் போக்கவல்லது. பூக்களின் நறுமணத்திற்கு மனித உளவியலைச் சரிசெய்யும் சக்தி இருக்கின்றது.

முதலிரவு என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான வாழ்வின் முக்கிய தொடக்கப்புள்ளியாகும். அந்தச் சந்தர்ப்பத்திலேதான் அவர்கள் பரஸ்பர புரிந்துணர்வுகளினைச் சந்திக்கின்றனர்.

ஆக தொடக்க நாளிலே வரும் கசப்பான அனுபவங்களை நிவர்த்தி செய்யும் சக்தி மலர்களின் நறுமணத்திற்கு உண்டு.

தவிர, படுக்கையிலே தூவப்படும் மலர்களின் நன்னாற்றம் ஆணின் உளவியலைச் சீர்மைப்படுத்தி ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் என்று சமீபத்திய ஆய்வுகளும் சொல்கின்றன.

நமது முன்னோர்களின் ஒவ்வொரு செயற்பாடுகளின் பின்னாலும் விஞ்ஞானத்திற்கொப்பான பல்வேறு உண்மைகள் அடங்கியிருக்கின்றன என்பது முக்கியமான அம்சமாகும்.