ரஜினியின் அரசியல் வருகை குறித்து சீமான் காட்டம்

291

அமோக எதிர்பார்ப்பிற்கிணங்க, தான் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்றும் தனிக்கட்சி தொடங்கி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இவரது, இந்த அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையமாக எதிர்ப்போம் என காட்டமாக கூறியுள்ளார்.

தமிழகத்தை தமிழர்கள் தான் ஆளவேண்டும் என கூறியுள்ளார்.

திருமாவளவன்

சாதி, மதம் சார்பற்ற அரசியல் பயணம் என ரஜினிகாந்த் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

துரைமுருகன்- திமுக

ரஜினியின் அரசியல் வருகை திமுகவிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டால் எங்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது, எங்கள் கட்சியின் பாதை தனி பாதை ஆகும் என கூறியுள்ளார்.