காலப்போக்கில் அழிந்து போனது, கண்ட உடனே யுனெஸ்கோ விருது வழங்கியது..! இதன் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் என்ன இருந்தது..?

403

இந்த கட்டிடம்  இன்றைய குஜராத் மாநிலத்தில் சித்பூர் என்கிற ஊருக்கு அருகில் உள்ள பதான் என்ற இடத்தில் உள்ளது..

இது இராணி கி வாவ் என்று அழைக்கபடுகிறது, அதாவது தமிழில் இராணியின் படிக்கிணறு..ஹிந்தியில் வாவ் என்றால் கிணறு என்று பொருள்.

நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய இக்கிணற்றை இந்தியாவில் உள்ள உலக பாரம்பரிய சின்னங்களின் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்து இருந்தது குறிபிடத்தக்கது

இராணி உதயமதி நிறுவியதால் இக்கிணற்றுக்கு இராணியின் கிணறு  என்ற பெயராயிற்று.

தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம்  ஆனால்? அதிசயம் கிடையாது.

ஷாஜகானுக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே. ராணி உதையமதி தனது கணவர் பீம் தேவுக்காக தாஜ் மஹாலை விட அழகான, பிரும்மாண்டமான ஒரு நினைவு சின்னத்தை உருவாக்கியுள்ளார்..

இந்த கட்டிடம்  ஒரு ஆணிற்காக ஒரு பெண்   உருவாக்கியதாகும்,

. கிணற்று வடிவத்தில் உள்ள கட்டிடங்கள் உலகில் மிக, மிக அபூர்வம். இந்தியாவில் கிணற்று வடிவில் உள்ள மிக பிரும்மாண்டமான அரண்மனை ராணி கி வாவ். கட்டிய இந்த அரண்மனையே ஆகும்..

இது எந்த அளவு பிரும்மாண்டமான கட்டிடம்  என்பதை கூற வேண்டும் என்றால் ஒரு சிறிய உதாரணம். இந்த கட்டிடத்தின் உள்ளே மட்டும் 30 கிலோ மீட்டர் நீள சுரங்க பாதை உள்ளது

காலப் போக்கில் இந்த அழகிய கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. இதனால் காலப்போக்கில் இந்தக் கிணற்றை பற்றித் தெரியாமலே போய்விட்டது. 1960 ஆம் ஆண்டு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது