மரணத்திற்கு பிறகும் வாழ்க்கை உண்டு: நிரூபித்துள்ள ஜேர்மனி மருத்துவர்கள்

0
568

மரணத்திற்கு பிறகும் வாழ்வு உண்டு என ஜேர்மனியைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆய்வுகளின் முடிவில் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இணைந்த குழு ஒன்று, மரணத்திற்கு பிறகான வாழ்க்கை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டது.

இந்த குழுவானது, கடந்த 2012லிருந்து 2016ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இறக்கும் தருணத்தில் இருந்த 944 பேரிடம், முக்கிய மருந்து கலவைகள் கொண்டு ஆய்வினை நடத்தியது.

எபிநெப்ரின் மற்றும் டைமெத்தில்டிரிப்டமைன் உள்ளிட்ட மருந்துகளின் கலவை கொண்டு, மரணித்த உடலினை எந்த வித சேதமும் இன்றி உயிர்பிக்க செய்யும், ‘Re-animation’ முறையை முதலில் இந்த குழு தொடங்கியது.

அதன் பின்னர், 18 நிமிடங்கள் கழித்து அந்த உடல் தற்காலிக நினைவுகளை இழந்த நிலையில் வைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அந்த உடலின் ரத்தத்தில் இருந்து மருந்து கலவைகளின் தூண்டுதலால் ஓசோன் பிரித்தெடுக்கப்படுகிறது.

இதையடுத்து, மருத்துவக் குழு அதன் பிறகான நடவடிக்கைகளை கண்காணிக்கின்றனர். பின்னர், அவர்கள் பெறும் வாக்குமூலங்களை தொகுத்து வைக்கின்றனர்.

இதற்காக ‘Cardio-Pulmonary Resuscitation’ என்னும் கருவியை அந்த குழு பயன்படுத்தியது. இந்த ஆய்வில், அனைத்து வாக்குமூலங்களிலும் மரண நிலையில் உள்ள நினைவுகள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன.

அவற்றில் பொதுவாக, உடலில் இருந்து பிரிவது போன்று உணர்வு கொண்ட நினைவுகள், தெய்வீக ஆற்றலால் மிதத்தல் உணர்வு, முழுவதும் அமைதி நிலை, பாதுகாப்பு, வெப்பமுடன் இருத்தல், மரண நிலையிலான முழு அனுபவம் மற்றும் அதிக அளவிலான ஒளி காணப்படுவது போன்றவை பெருமளவில் உள்ளன.

ஆனால், பெரும்பாலான வாக்குமூலங்களில் மத நம்பிக்கைகள் சார்ந்த விடயங்கள் எதுவும் இல்லை. இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட மனிதர்கள் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் பிற மத நம்பிக்கைகளை கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, இந்த குழுவில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பெர்தோல்டு ஆக்கர்மேன் கூறுகையில், ‘மனிதகுல வரலாற்றின் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்றிற்கு நாங்கள் பதிலளித்துள்ளோம். அதனால், மத நம்பிக்கை கொண்டவர்கள் எங்களை மன்னித்து விடுவார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது. இது ஒவ்வொருவருக்கும் உள்ளது என கருதுகிறோம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *