மனதை உருக்கும் சம்பவம்!! காதலன் பிரிவை தாங்கமுடியாத காதலியும் தற்கொலை!! காதலன் தூக்கில்!! காதலி கிணற்றில்

996

வவுனியா கொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள (AFRIEL) அமைப்பின் விடுதியிலிருந்து நேற்று (25.02) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,
குறித்த விடுதியில் நேற்று முந்தினம் ( 24.02) மாலை வேளை விடுதியில் தங்கியிருந்த இருவர் மதுபானம் அருந்தியுள்ளனர். இரவு 7.00 மணியளவில் ஒருவர் வெளியே சென்றுள்ளார். இதன் போது குறித்த விடுதியில் ரகுநாதன் சுகிர்தரன் (31 வயதுடைய தூக்கில் தொங்கிய நபர் ) இருந்துள்ளார். இரவு 12.00 மணியளவில் குறித்த நபர் விடுதியின் தனது அறைக்கு திரும்பியுள்ளார்.

இருந்தும் காலை 9.30 மணியாகியும் சுகிர்தரன் அறையினை விட்டு வெளியே வராத காரணத்தினால் விடுதியில் தங்கியிருந்த மற்றைய நபர் அறையின் கதவினையுடைத்துள்ளார். அதன் போது ரகுநாதன் சுகிர்தரன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

உடனடியாக 119 அவசர பொலிஸ் இலக்கத்திற்கு தகவல் வழங்கியதையத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


காதல் விவகாரத்தினால் குறித்த நபர் தூக்கில் தொங்கியிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இந் நிலையில் குறித்த இளைஞனின் காதலியும் நேற்று (25.02) காலை 10.30 மணியளவில் புதுக்குடியிருப்பில் உள்ள அவரது வீட்டு கிணற்றினுள் வீழ்ந்து தற்கொலை செய்துள்ளார்.

குறித்த பெண்ணின் காதலன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ததன் காரணமாக இப் பெண்ணும் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் புதுக்குடியிருப்பு 9ம் வட்டாரத்தினை சேர்ந்த 29வயதுடைய ரஜீதா என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.