வடமாகாண பாடசாலை மாணவிகளுக்கு ஆப்பு!!

0
347

வடக்கு மாகாண பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டுமென வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விதிகள் தொடர்பாகவும் பேசப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு கோரியுள்ளார்.வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வடக்கு மாகாண கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சகோதர, இனமான முஸ்லிம் மாணவிகளின் நீளக் காற்சட்டை போன்ற ஆடையை எமது மாணவிகளும் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.‘மாணவர்களுக்கு இலவசச் சீருடைகள் வழங்கப்படுகின்றன. srilanka school girls uniform க்கான பட முடிவுஅதற்கு ஏற்றவாறே ஆடைகள் தைக்கின்றனர். பாடசாலை மாணவிகள் ஒழுக்கமான முறையிலேயே உடை அணிகின்றனர். இது தொடர்பில் ஆராயலாம் என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் பதிலளித்துள்ளார்.அதேவேளை, வடக்கு மாகாணப் பாடசாலைகளின் நேர மாற்றத்தை ஏற்க முடியாது என்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.நேற்றைய அமர்வில் வடக்கு மாகாண பாடசாலைகளின் நேர மாற்றம் தொடர்பிலும் பேசப்பட்டது.
வடக்கில் சில பாடசாலைகளில் நேர மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. வடக்கில் உள்ள கஸ்டப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள், போக்குவரத்து வசதி குறைந்த பாடசாலைகள் போன்றவற்றின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணிக்குப் பாடசாலையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.அவைத் தலைவர் அப்போது குறுக்கிட்டார். பாடசாலை நேரத்தில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பில் பொதுச் சபையின் அனுமதி பெறப்பட்டா?’- என்று அவர் கேட்டார்.அதற்கான நெறிமுறைகளை மேற்கொண்ட பின்னர் தெரிவிக்கலாம் என்று நினைத்தோம் என பட்டும்படாமலும் கல்வி அமைச்சர் பதலிளத்தார் .

அனுமதி பெறாது எடுக்கப்பட்ட முடிவை நாம் ஏற்க முடியாது. மாகாண அமைச்சுக்களோ அல்லது அமைச்சரோ உறுப்பினர்களோ ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்தும்போது, பொதுச் சபையின் கவனத்துக்கும், எமது கவனத்துக்கும் கொண்டுவர வேண்டும்.

அவை உறுப்பினர்களால் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டும். அப்படியான முடிவுகளையே நாம் ஏற்க முடியும் என அழுத்தம் திருத்தமாக வடக்கு மாகாண அவைத் தலைவர் கூறி முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *