காதலித்து ஏமாற்றிய தமிழக இளைஞருக்கு பாடம் புகட்ட இலங்கை பெண் எடுத்த துணிச்சல் முடிவு

274

தமிழகத்தின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நியாஸ். இவர் இலங்கையை சேர்ந்த ஜெசிமா என்ற பெண்ணை துபாயில் இருக்கும் போது காதலித்துள்ளார்.

அதன் பின் அந்த பெண்ணுடன் இலங்கை சென்று திருமணம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த காரணத்தினால் ஜெசிமாவை நாகையில் உள்ள தனது ஊரான குத்தாலத்திற்கு முகமது அழைத்து வந்துள்ளார்.

அப்போது சொந்தமாக தொழில் செய்யப் போகிறேன் எனக் கூறி 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 30 சவரன் நகையை வாங்கிக் கொண்டு சென்றவர் வீடு திரும்பவேயில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஜெசிகா அவரைப் பற்றி விசாரித்த போது அவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவர் என்பது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நீண்ட நாட்கள் ஆகியும் கணவர் கண்டுபிடிக்கப்படாத்தால் ஜெசிமா மீண்டும் இலங்கைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் முகமது நியாஸ் 4-வதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் ஜெசிமாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமின்றி பிறந்த குழந்தையை பார்க்க அவர் குத்தாலம் வரவுள்ளதும் ஜெசிமாவிற்கு தெரியவந்துள்ளது.

உடனடியாக இலங்கையிலிருந்து குத்தாலத்திற்கு விரைந்த ஜெசிமா, முகமது வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார்.

ஆனால் அங்கிருந்த முகமதுவின் தாய் மற்றும் தந்தை ஜெசிமாவை அடித்தது மட்டுமின்றி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதற்கு எல்லாம் பயப்படாமல் ஜெசிமா முன்னர் புகார் கொடுத்த காவல்நிலையத்தில் நடவடிக்கை எடுக்காததால், அவர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, இடைக்கால உத்தரவில் ஜெசிமாவை அவரது கணவர் வீட்டில் குத்தாலம் பொலிசார் சேர்க்க வேண்டும்.

அப்படி அவரது வீடு பூட்டப்பட்டிருந்தால் பொலிசார் உதவியுடன் பூட்டை உடைத்து, வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும். அவருக்கு எதிர் மனுதாரரால் இடையூறு ஏற்பட்டால் பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.