ஆண், பெண் நிர்வாணமாக சுற்றி திரியும் நகரம்: எங்குள்ளது தெரியுமா?

0
150

பல்வேறு நகரங்களில் வருடந்தோறும் மார்ச் 12 திகதி பல்வேறு நகரங்களில் Naked Bike Ride எனும் விழா நடத்தப்படும், இவ்விழா உடலை ஆரோக்கியமாக பராமரிக்கும் நோக்கத்தில் பின்பற்றப்படுகிறது.

இவ்விழாவின் போது நிர்வாணமாக ஆண்- பெண் பலரும் இருச்சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு Naked Ride செல்வார்கள்.

வெயில் காலங்களில் நடத்தப்படும் இவ்விழாவில் ஆங்காங்கே செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் நீரூற்றுகளில் ஆண்- பெண் இருபாலரும் குளிக்கின்றனர்.

அந்த தண்ணீரில் சில வகை மினரல்கள் அதிகமாக இருக்கும், அவை உடல்நலனுக்கு நல்லது என்றும் சொல்கிறார்கள்.

இந்தோனியா

இந்தோனியாவில் இருக்கக்கூடிய சில ஸ்பா செண்ட்டர்களில் நிர்வாணமாக தெரபிகள் வழங்கப்படுகிறது.

வெளியிடத்தில் காற்றோட்டமான பகுதியில் நிர்வாணமாக உங்களுக்கு தெரபி கொடுக்கப்படுவதால் வழக்கத்தை விட விரைவிலேயே ரிலாக்ஸ் ஆவீர்கள் என்று சொல்லப்படுகிறது.

ஃபின்லாந்து

ஃபின்லாந்தில் இருக்கக்கூடிய ஹெல்ஸின்கி எனும் இடத்தில் மரத்திலான ஆன வீடு அமைந்திருக்கிறது. இங்கு ஆண், பெண் நிர்வாணமாக தங்கி, மசாஜ் செய்து கொள்கின்றனர்.

ஆஸ்டிரியா

ஆஸ்டிரியாவின் வொர்தெர்சீ எனும் இடத்தில் நிர்வாணம் ஒரு ஆர்ட் என்ற பெயரில் கலைஞர்கள் பலரும் இணைந்து நிர்வாணமாக பங்கேற்று தங்களது கலைத்திறனை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த விழாவில் பங்கேற்க உலகம் முழுவதில் இருந்தும் கலைஞர்கள் வருகிறார்கள். பெரும்பாலும் தங்கள் உடலை விதவிதமாக வண்ணக் கலவையை கொண்டு மறைத்துக் கொள்கிறார்கள்.

பிரான்ஸ்

பிரான்ஸின் கேப் டி ஏஜ்டு எனும் நகரம் முழுவதும் நிர்வாணமாக மக்கள் நடமாட அனுமதி உள்ளது. ஏனெனில் இயற்கையை நேசிப்பவர்கள் தங்கள் உடலையும் நேசிக்க வேண்டும் என இந்த ஏற்பாடாம்.

ஆனால் இங்கு விருப்பம் உள்ளவர்கள் மட்டும் உடை அணிந்து கொள்ளலாம் என்கின்றனர்.

ஜேர்மனி

ஜேர்மனியில் இருக்கும் முனீச் நகரின் பார்க் ஒன்று ஐரோப்பாவின் மிகப்பெரிய பார்க். இந்த பார்க்கில் நிர்வாணமாக சன் பாத் எடுக்க 1960-லிருந்து அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதைத் தவிர முனீச் நகரத்தில் ஆறு இடங்களில் மக்கள் நிர்வாணமாக நடமாட அனுமதியும் உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாரணத்தில் இருக்கும் மியாமி கடற்கறை, உடை உங்களது விருப்பம் என்று சொல்லி அரசாங்கம் அனுமதியளித்த இடங்களில் ஒன்றாக உள்ளது.

இங்கு பெரும்பாலும் ஆண், பெண் நிர்வாணமாக சன்பாத் எடுத்துக் கொள்கிறார்கள்.

க்ரோசியா

க்ரோசியா என்ற நாட்டில் தண்ணீரின் அழகை ரசிக்கும் விதத்தில் க்ரோசியாவைச் சுற்றியிருக்கும் குட்டி குட்டி தீவுகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இங்கெல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டுமானால் நிர்வாணமாக வரத் தயாராக வேண்டுமாம். ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்ட் 29-லிருந்து செப்டம்பர் 5-ம் திகதி வரை ப்ளாக் ராக் டெசர்ட் என்ற விழா நடக்கிறது.

பர்னிங் மேன் என்று அடையாளப்படுத்தப்படும் இவ்விழாவிலும் அனைவரும் நிர்வாணமாகவே பங்கேற்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *